For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்எல்ஏக்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி...எஸ்கேப் ஆன செந்தில் பாலாஜி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 3 பேர் பங்கேற்கவில்லை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் 3வது முறையாக முதல்வர் பழனிசாமியுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன், அருள்முருகன் ஆகியோர் பங்கேற்கவில்லையாம்.

அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் அணி என மூன்று அணிகள் உள்ளன. டிடிவி தினகரனை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் பெரும்பான்மையை இழந்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. ஆட்சி ஆட்டம் கண்டு வருகிறது.

Pro Dinakaran MLAs meet CM Edappadi

எம்எல்ஏக்களை தினசரியும் சந்தித்து பேசி வருகிறார். அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு இன்று மூன்றாவது நாளாக எம்எல்ஏக்களை சந்தித்து பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.

இன்று கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வரைச் சந்தித்துள்ளனர். மேலும் எம்.எல்.ஏக்கள் வேலுமணி, ஜெயராம், காமகராஜ்,அம்மன் அர்ஜுன், கஸ்தூரிவாசு ஆகியோர் முதல்வரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 3 பேர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. எம்எல்ஏக்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன், அருள்முருகன் ஆகியோர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் ஆதரவாளர்களாக மாறியுள்ளதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிகிறது. அதே நேரத்தில் டிடிவி தினகரனை சந்தித்து பேசிய பல எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
More pro Dinakaran supporters including Thanga Tamilselvam met CM Edappadi Palanisami today. But Senthil Balaji and two others missed the meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X