ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு... நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, காவல் துறையினர் விசாரிக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று முடிவெடுக்க உள்ளது.

ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அதனை விசாரிக்க வேண்டும் எனவும் கடந்த மே 22 ஆம் தேதி செல்வ விநாயகம் என்ற வழக்கறிஞர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Probe into Jayalalithaa's death, Court orders Today

அதில், அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 186 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தப் புகாரை காவல் துறையினர் ஏற்காததை அடுத்து அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார்.

அதில் தனது புகாரை பதிவு செய்து விசாரணை செய்ய தேனாம்பேட்டை காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிடுமாறு கோரினார்.

இந்த வழக்கு நீதிபதி மேகலா முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இது போன்று பலர் வழக்கு தொடர முயல்வதாகவும், இவை தேவையற்ற குழப்பத்தை உண்டாக்கும் என்பதால் வழக்கை பதிவு செய்யவில்லை எனவும் அரசு தரப்பில் விளக்க மளிக்கப்பட்டது.

யாரொருவர் வழக்கு தொடுத்தாலும் அதனை பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் வழக்கை பதிவு செய்ய உத்தரவிடுமாறு மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மேகலா, வழக்கு தொடர்பாக இன்று உத்தரவு வெளியிடப்படும் என்று கூறி ஒத்திவைத்திருந்தார்.

இதனையடுத்து இன்று உத்தரவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Probe into Former CM Jayalalithaa's death, Chennai Saidapet Court orders Today .
Please Wait while comments are loading...