ரெய்டிலிருந்து.. தினகரன், சசிகலா கணவர் நடராஜன் வீடுகளும் தப்பவில்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி ரெய்டு-வீடியோ

  சென்னை: சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் கணவர் நடராஜன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களையும் வருமான வரித் துறையினர் விட்டு வைக்கவில்லை.

  சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சொந்தமான 160 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, பெங்களூர், தஞ்சாவூர், மன்னார்குடி ஆகிய இடங்களில் இந்த ரெய்டு நடக்கிறது.

  Raid in TTV Dinakaran's house and Natarajan's house

  சென்னையில் ஜெயா டிவி அலுவலகம், நமது எம்ஜிஆர் நாளேடு அலுவலகம், ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட இடங்களில் ஐடி ரெய்டு நடைபெறுகிறது. மேலும் டிடிவி தினகரன் பெங்களூரில் முகாமிட்டுள்ள நிலையில் அடையாறில் உள்ள அவரது வீட்டிலும், தஞ்சையில் உள்ள சசிகலா கணவர் நடராஜன் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

  நடராஜனுக்கு அறுவை சிகிச்சை முடிந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு அருளானந்த நகரில் வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  It sleuths raid in TTV Dinakaran's Adyar house and Natarajan's Tanjore house.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X