சென்னையில் காற்றுடன் மழை.. மக்கள் மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் சில இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 Rain lashes in many parts of Chennai city

நேற்று மாலை சென்னையின் பல இடங்களில் பலத்த மழை பெய்த நிலையில், இன்று மாலையிலும் சுமார் 6.30 மணியளவில் நகரின் பல பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக, தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், உள்ளிட்ட தெற்கு சென்னை பகுதிகளில் மழை பெய்தது. காற்றுடன் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதனிடையே இரவு 10.30 மணிக்கு மேல் மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட மேலும் பல பகுதிகளிலும் 20 நிமிடங்களுக்கு மேலாக மழை தொடர்ந்து பெய்தது. இதனால் இரவு நேரத்தில் சென்னையில் குளுகுளு வானிலை நிலவியது.

இருப்பினும் இந்த மழை கனமழையாக மாறவில்லை. நேற்று முதல் 3 நாட்களுக்கு சென்னையைில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக நகர வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rain lashes in many parts of Chennai city especially in the southern parts at the evening time.
Please Wait while comments are loading...