For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி சென்றார் ரஜினி.. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் உதவி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க தற்போது ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பேட்டி-வீடியோ

    சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க தற்போது ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றுள்ளார்.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 30க்கும் அதிகமானோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இவர்களை அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் சென்று சந்தித்து வருகிறார்கள்.

    Rajini meets victims of Sterlite shooting in Tuticorin

    இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க தற்போது ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றுள்ளார். இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னையில் இருந்து அவர் தூத்துக்குடி சென்றார்.

    தற்போது அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். உள்ளே பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடி வருகிறார். வரும்வழியில் திறந்தவெளி வாகனத்தில் தூத்துக்குடி மக்களை சந்தித்தார்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க உள்ளார். ரஜினி வருகை காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பின் முதல்முறையாக அவர் மக்கள் பிரச்சனை ஒன்றிற்காக களமிறங்கியுள்ளார்.

    English summary
    Rajini meets victims of Sterlite shooting in Tuticorin . He will give 2 lakhs compensation to people family those who lost a live.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X