ஆன்மீக அரசியல் செய்ய போகிறேன்.. அது என்ன ஆன்மீக அரசியல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜாதி மதம் வேறுபாடு இல்லா ஆன்மீக அரசியல் செய்ய போகிறேன் - ரஜினி அதிரடி

  சென்னை: ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி இன்று கடைசி நாளாக தனது ரசிகர்களை சந்தித்தார். ரஜினி ரசிகர்கள் பல நாட்களாக எதிர்பார்த்து கொண்டு இருந்த அறிவிப்பை ரஜினி வெளியிட்டுவிட்டார்.

  வரும் சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சியுடன் போட்டியிடுவேன் என்று ரஜினி அறிவித்து இருக்கிறார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது.

  அவர் தன்னுடைய அரசியல் கொள்கை ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றுள்ளார். ரஜினியின் இந்த அரசியல் நிலைபாடு அரசியல்வாதிகளை குழப்பி இருக்கிறது.

  ஆனமீகம்

  ஆனமீகம்

  தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று ரஜினிகாந்த் அறிவித்து இருக்கிறார். இதன் காரணமாக அவருடைய அரசியல் நிலைபாடு எப்படி இருக்கும் என்று தெரியவந்து இருக்கிறது.

  இந்த நிலையில் அவர் ஆன்மீக அரசியல் செய்வேன் என்று கூறியுள்ளார். அதன்படி அவர் தற்போது இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

  அரசியல் கட்சிகளுக்கு மாற்று

  அரசியல் கட்சிகளுக்கு மாற்று

  கடந்த 50 வருடங்களாக தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயங்கங்களும், திராவிட கட்சிகளும் ஆட்சி செய்து வருகிறது. எனவே அதற்கு மாற்றாக வெளிப்படையாக ஆன்மீக அரசியல் செய்வேன் என்று ரஜினி தெரிவித்துள்ளார். அதேபோல் ஆன்மீகம் அரசியல் குறித்த அறிவிப்பு, மக்கள் மத்தியில் தன் மீது நம்பிக்கையை உருவாக்கும் என்றும் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  ஆன்மீக நம்பிக்கை

  ஆன்மீக நம்பிக்கை

  அதே சமயத்தில் அவர் ஜாதி, மத சார்பற்ற அரசியல் செய்வேன் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்.

  இதன் காரணமாக அவரது சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல் என்பது எப்படி இருக்கும் என்று பல அரசியல் கட்சிகளும் குழப்பிப் போய் இருக்கிறது.

  குழப்பம்

  குழப்பம்

  மேலும் அவர் தமிழ்நாட்டு அரசியல் மோசமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளதால், தற்போது இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு இவர் மாற்றாக இருக்க விரும்புகிறார் என்றும் கூறப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் குழப்பத்திற்கு தீர்வாக தன்னை முன்னிறுத்த வர திட்டமிட்டு இருக்கிறார் என்று கூட கூறலாம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajini announced his political entry. Rajini says thet he will do spiritual politics in Tamilnadu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X