இந்த மாதம் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்.. முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இந்த மாதம் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். பிப்.14, 15 மற்றும் 16 தேதிகளில் இந்த சந்திப்பு நடக்கிறது.

ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார். 2021ல் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். முறையான கட்சி அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்களை தினசரி அரசியல் குறித்து பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Rajini will meet district secretaries by this month

அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின் கட்சி சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அவர் இணையதளம் மட்டும் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் தற்போது ரஜினி இந்த மாதம் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். பிப்.14, 15 மற்றும் 16 தேதிகளில் இந்த சந்திப்பு நடக்கிறது.

ஏற்கனவே சில மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் மாவட்ட நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களுக்கு கூடிய விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் சந்திப்பு நடக்கும் அதே தேதியில் தேதியில் தேனி, நீலகிரி மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் தேர்வு நடைபெறுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் வெளியிட்டார்.

இதேபோல் இந்த சந்திப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajini has announced his political entry. After his announcement for the first time few Secretaries are appointed for Rajini Makkal Mandram. Rajini will meet district secretaries by this month.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற