For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காலில் விழாதீர்கள் என பேச்சு.. தமிழக அரசுக்கு ரஜினி மறைமுக அட்வைஸ்?

அதிகாரம் இருப்பவர்கள் காலில் விழாதீர்கள் என்று ரஜினி தமிழக அரசுக்கு வைக்கப்பட்ட சூடா என்ற கேள்வி எழுந்தது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்து வைக்க ஆசைப்படும் ரஜினி- வீடியோ

    சென்னை: அதிகாரம் இருப்பவர்கள் காலில் விழாதீர்கள் என்று ரஜினி ரசிகர்களுக்கும், மக்களுக்கு மட்டும் கூறினாரா இல்லை தமிழக அரசுக்கும் சேர்த்து கொடுக்கப்பட்ட சவுக்கடியா என்ற கேள்வி எழுந்தது.

    ரஜினிகாந்த் தற்போது 2-ஆவது முறையாக தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். கடந்த 26-ஆம் தேதி முதல் இந்த சந்திப்பு தொடங்கி வரும் 31-ஆம் தேதி வரை முடிகிறது.

    இந்த சந்திப்புகளில் தினமும் ரசிகர்கள் மத்தியில் சில கருத்துகளை ரஜினி முன்வைத்து வருகிறார்.

    ரஜினி அறிவிப்பு

    ரஜினி அறிவிப்பு

    முதல் நாளான செவ்வாய்க்கிழமை அன்று ரஜினி பேசுகையில் வரும் 31-ஆம் தேதி எனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன் என்றார். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.

    ரஜினியின் அட்வைஸ்

    ரஜினியின் அட்வைஸ்

    ரஜினி நேற்றைய தினம் பேசுகையில் குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள். முதலில் குடும்பத்தை கவனியுங்கள். ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

    ரஜினியின் அறிவுரை

    ரஜினியின் அறிவுரை

    இன்றைய தினம் ரஜினி மதுரை மாவட்ட ரசிகர்களை சந்தித்த போது அவர் கூறுகையில், உயிரை கொடுத்த கடவுள், உடலை வளர்த்த தாய், தந்தை ஆகியோர் காலில் மட்டுமே விழ வேண்டும். பெரியவர்கள் காலிலும் விழலாம். வயதான பெரியவர்கள் காலில் விழுவது ஏன் என்றால், இந்த கஷ்டமான வாழ்க்கையை நடந்து கடந்து வந்தவர்கள் அவர்கள்.

    அரசியல் பேச்சு

    அரசியல் பேச்சு

    அந்த பாதைகளில் நாமும் நடக்கப்போகிறோம் என்பதால், அவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறலாம். ஆனால், பணம், புகழ், அதிகாரம் உள்ளவர்கள் கால்களில் விழ அவசியம் இல்லை என்று ரஜினி பேசியது அரசியல் பேச்சாகவே பார்க்கப்படுகிறது. இது ரசிகர்களுக்கு மட்டுமே தந்த அறிவுரை இல்லாமல் மத்திய அரசுடன் "இணக்கமாக" தமிழக அரசுக்கும் சேர்த்து வைக்கப்பட்ட சூடாகவே பார்க்கப்படுகிறது.

    தமிழக அரசின் செயல்பாடு

    தமிழக அரசின் செயல்பாடு

    நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் திட்டம், விவசாயிகள் பிரச்சினை என மத்திய அரசை தட்டி கேட்டாமல் பதவிக்காகவும் சிபிஐ ரெய்டுக்காகவும் மத்திய அரசின் காலில் தமிழக அரசு விழுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதை மனதில் வைத்துக் கொண்டு ரஜினி இவ்வாறு கூறியிருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

    ரஜினியின் நிலைப்பாடு

    ரஜினியின் நிலைப்பாடு

    தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றவர் இப்போது யார் காலிலும் விழாதீர் என்று அறிவுறுத்தியுள்ளார். தவறான திட்டங்கள் என்றால் "நண்பர்" என்றாலும் எதிர்க்கும் பக்குவத்துக்கு ரஜினி வந்துவிட்டதையும் காட்டுகிறது.

    English summary
    Rajinikanth meets his fans club on 3rd day of his schedule. He also advises his fans that dont touch the feet of those who having power. He says this advises symbolically to the TN government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X