காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகாவில் முதலில் சிஸ்டத்தை சரிசெய்யுங்க.. ரஜினிக்கு ஜெயக்குமார் அட்வைஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகாவில் முதலில் சிஸ்டத்தை சரி செய்யுங்கள் என அமைச்சர் ஜெயக்குமார் ரஜினிக்கு அட்வைஸ் தெரிவித்துள்ளார்.

அரசியல் பிரவேசம் அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் எது கூறினாலும் பிரேக்கிங் நியூஸ் ஆகி விடுகிறது. இந்நிலையில் சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் முதலில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும் என கூறினார்.

இது பெரும் விவாதப்பொருளானது. இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

பிஇ பட்டதாரியா?

பிஇ பட்டதாரியா?

அதாவது பிஇ பட்டதாரிகள் தான் சிஸ்டம் சரியில்லை என கூறுவார்கள், ரஜினியும் சிஸ்டம் சரியில்லை என்கிறார். ரஜினிகாந்த் என்ன பிஇ பட்டதாரியா அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

கர்நாடகாவில் முதலில்

கர்நாடகாவில் முதலில்

காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகாவுக்கு சென்று முதலில் ரஜினி சிஸ்டத்தை சரிசெய்யட்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். காவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய்த்திறக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மதசார்புள்ள அரசை?

மதசார்புள்ள அரசை?

ரஜினி ஆன்மிக அரசியல் பேசினால் பேசட்டும், நாங்கள் அண்ணாவின் கொள்கைப்படி செயல்படுவோம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். ஆன்மிகத்தின் மூலம் மதசார்புள்ள அரசை ரஜினி விரும்புகிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அமைதி பூங்கா

அமைதி பூங்கா

அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் வீரமிக்க புலிகள் என்றும் அவர் கூறினார். தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Jayakumar has said that Rajinikanth has to correct the system in Karnataka first who is not giving Cauvery water to Tamilnadu.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற