ரஜினிகாந்துக்கு அடேங்கப்பா.. எத்தனை தகுதிகள்! டிவி விவாதத்தில் அலறவிட்ட ரசிகர்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததைத் தொடர்ந்து டிவி விவாதங்களில் ரசிகர்கள் பங்கேற்று வருகிறார்கள். ரஜினி ரசிகர்கள் முன்வைக்கும் விவாதங்கள்தான் சமூக வலைதளங்களில் படுசுவாரசியமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Rajinikanth fan's TV debate goes on viral

தந்தி டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி ரசிகர் என்பவர் பேசியதன் தொகுப்பு:

ரஜினி அரசியலுக்கு வந்தா என்ன செய்வார்? என்ன தெரியும்னு கேட்கிறாங்க....அவரு நல்லா ஆங்கிலம் பேசுவாரு.. இந்தி பேசுவாரு.. தமிழ் பேசுவாரு..

அவர் முதல்வரான உடனேயே ஆங்கிலத்தில் பேசி வெளிநாடுகளில் இருந்து முதலீட்டை கொண்டு வருவாரு

இந்தி பேசி சென்ட்ரல் கவர்மென்கிட்ட இருந்து நிதியை வாங்குவாரு..

கன்னடத்தில் பேசி கர்நாடகாகிட்ட இருந்து தண்ணீ வாங்குவாரு...

மொழியை வெச்சுதான் ஒருத்தரோடு இணக்கம் அடைய முடியும். இப்ப நான் மத்திய அரசுடன் இணக்கம் அடையும்னு எனக்கு இந்தி தெரிஞ்சாதான் இணங்க முடியும்.

இந்த லாஜிக் கண்டிப்பா எடுபடும்.

அன்னிய நேரடி முதலீடு எல்லாம் எதுல வருதீங்கன்னு பார்த்தீங்கன்னா இங்கிலீஷ்லதான் வருது.,

நீங்க வெளிநாட்டு கம்பெனிங்க வரும்போது இங்கிலீஷ்ல பேசி அந்த முதலீடுகளை வாங்கனும்

அதேபோல் மேக்சிமம் சென்ட்ரல் கவர்மென்ட்டுல எல்லோருக்கும் தெரிஞ்சது இந்தி.. அவங்க கிட்ட இந்தியில பேசி எல்லா நிதியையும் வாங்குவாரு,.

கர்நாடகாரங்க கன்னட வெறியர்னுவாங்க.. கன்னடத்தில பேசி காவிரி தண்ணியை வாங்குவாரு

இதையெல்லாம் எப்படி செஞ்சோம்னு தமிழ்நாட்டுக்கு தமிழில் சொல்வாரு,.,

ஒருநாட்டின் பொருளாதாரத்தையே மொழிதான் தீர்மானிக்கிறது...

இதை பார்த்துகிட்டு இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் கிட்ட ஒரு கோரிக்கை வைக்கிறேன்.. உங்களை சந்திக்க 15 வருஷமா முயற்சி செஞ்சுகிட்டு இருக்கேன். தயவு செய்து எனக்கு ஒரே ஒரு போட்டோ மட்டும் கொடுத்திடுங்க போதும்.

இவ்வாறு ரஜினி ரசிகர் என்பவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth Fan's TV Debate went on viral in social media.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X