2 வாரங்களில் ரஜினியின் புதிய கட்சி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸன் Vs அதிமுக அரசியல் சண்டை சற்றே ஓய்ந்துள்ள நிலையில், மீண்டும் ரஜினியின் புதிய கட்சி பற்றிய பரபரப்பு கிளம்பி விட்டது.

இன்னும் இரண்டே வாரங்களில் ரஜினிகாந்த் தனது புதிய அரசியல் கட்சி, கொடி, கொள்கைகளை அறிவிப்பார் என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளது தமிழகத்தில் மட்டுமல்ல, வட இந்தியாவையும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

நேற்று முழுக்க பிரபல ஆங்கில செய்திச் சேனல் #ரஜினிநேதா (தலைவர் ரஜினி) அரசியல் வருகை என்ற தலைப்பில் ரஜினிக்கு நெருக்கமான நண்பர்கள், தமிழருவி மணியன் போன்ற தலைவர்களிடம் பேசி, ரஜினியின் அரசியல் வருகையை உறுதி செய்தது.

லீக் செய்த தமிழருவி மணியன்

லீக் செய்த தமிழருவி மணியன்

இவர்களில் தமிழருவி மணியன் ரஜியின் அரசியல் கட்சி எப்போது தொடங்கப்படும் என்பதை உறுதியாகவே அறிவித்துவிட்டார். இன்னும் இரண்டு வாரங்களில் இந்தக் கட்சி அறிவிக்கப்பட்டுவிடும் என்றும், ரஜினி கட்சியின் கொள்கைகள் என்னவென்பது குறித்தும் விரிவாக தமிழருவி மணியன் பேசியுள்ளார்.

2 வாரங்களில் கட்சி வருதாம்

2 வாரங்களில் கட்சி வருதாம்

அவர் கூறுகையில், "இன்னும் 2 வாரங்களில் ரஜினி தனது புதிய கட்சியை தொடங்கி விடுவார். அப்போது அவர் உறுதி மொழிகளாக சில அறிவிப்புகளையும் வெளியிடுவார். தென்கை நதிகளை இணைப்பது, ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை மக்களுக்கு தருவது ஆகியவை அவரது உறுதி மொழிகளில் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்," என்றார்.

டெல்லியில் குழு அமைப்பு

டெல்லியில் குழு அமைப்பு

கட்சியின் பெயரைப் பதிவு செய்யும் வேலைகளை ஒரு குழு டெல்லியிலிருந்து கவனித்து வருகிறது. ரஜினி கட்சியின் கொள்கை, முன் வைக்கும் மக்களுக்கான திட்டங்கள், ரஜினி மக்களுக்குத் தரும் வாக்குறுதிகளை ஒரு குழு தயாரித்து வருவதாகவும், ரஜினியே நேரடியாக அதை மேற்பார்வை செய்வதாகவும் கூறப்படுகிறது.

Rajinikanth says I am pure Tamilian
பரபரப்பு

பரபரப்பு

இரண்டே வாரங்களில் ரஜினி கட்சி அறிவிப்பு உறுதி என்று தமிழருவி மணியன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கட்சிப் பெயர் என்ன, கொள்கை என்ன என்பதை அறிய அனைவரும் காத்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources confirmed that Rajinikanth will be announced his new party in just 2 weeks.
Please Wait while comments are loading...