அரசியல்வாதிகளை திட்ட வேண்டாம்... போராட்டம், அறிக்கை வேண்டாம்... இதுதான் ரஜினியின் நாகரீக அரசியல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் - ரஜினி

  சென்னை: அரசியல்வாதிகளை விமர்சித்து அரசியல் செய்ய கூடாது என்பதுதான் ரஜினியின் நாகரீக அரசியல் உணர்த்தும் செய்தியாகும்.

  பொதுவாக ரஜினி யார் மீதும் தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை முன்வைப்பதை அவர் விரும்ப மாட்டார். அதுபோல் அவரது ரசிகர்கள் விமர்சனம் செய்வதையும் அவர் கண்டிப்பார். அதுதான் ரஜினி அவ்வப்போது சொல்லும் கட்டுப்பாடு.

  யார் என்ன கூறினாலும் பதிலுக்கு பதில் அவமரியாதையாக கருத்து சொல்வதை ரஜினி ஒருபோதும் விரும்ப மாட்டார்.

  ரஜினி கூறியது என்ன

  ரஜினி கூறியது என்ன

  ரஜினி இன்று ரசிகர்களிடம் கூறுகையில், ஜனநாயகம் சீர்கெட்டுப் போச்சி. கடந்த ஒரு ஆண்டா, தமிழ்நாட்டில் நடந்த சில அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள், ஒவ்வொரு தமிழக மக்களையும் தலைகுனிய வச்சிடுச்சி. எல்லா மாநில மக்களும் நம்மளப் பார்த்து சிரிக்க வச்சிட்டிருக்காங்க. பழைய காலத்தில் அடுத்த நாட்டு கஜானாவை கொள்ளையடிப்பார்கள். இப்போ சொந்த நாட்டிலேயே, சொந்த பூமிலேயே கொள்ளையடிக்கிறார்கள்.

  எப்படி தேர்தல்

  எப்படி தேர்தல்

  ஜனநாயக ரீதியில் தேர்தலை எப்படி சந்திப்பது என்பது குறித்து ஆலோசிப்போம்.

  அதற்கு நாம் முதலில் தயாராவோம். அதுவரை அரசியல்வாதிகள் குறித்து நான் உள்பட யாரும் விமர்சிக்க வேண்டாம். அன்றாட அரசியல்வாதிகளை திட்டுவது, குறை சொல்வது இவையெல்லாம் வேண்டாம். அறிக்கை விடுவது, போராட்டம் செய்வது அதற்கென நிறைய பேர் இருக்கிறார்கள் என்றார் ரஜினி.

  குற்றம், குறை சொல்வது

  குற்றம், குறை சொல்வது

  இன்றைய அரசியலில் பாஜக மீது காங்கிரஸும், காங்கிரஸ் மீது பாஜகவும், அதிமுக மீது திமுகவும், திமுக மீது அதிமுகவும் மாறி மாறி குறை கூறி வருகின்றன. ஆனால் ஒரு கட்சியும் குறை கூறாமல் நாம் என்ன செய்தோம்... எதை செய்ய தவறிவிட்டோம்... எப்போது செய்வோம் என்று இதுவரை கூறியதில்லை. இது ஆரோக்கியமான அரசியல் சூழலே இல்லை என்பதே பொதுமக்களின் கருத்தாகும்.

  நாகரீக அரசியல்

  நாகரீக அரசியல்

  ஆனால் ரஜினியோ அவர் கடந்த மே மாதம் அரசியல் குறித்து பேசிய போது தமிழ் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள், சினிமா துறையினர் என கண்டபடி விமர்சித்தனர். அதற்கு பதிலடி கொடுக்கக் கூடாது என்றும் டிவி விவாதங்களில் பங்கேற்க கூடாது என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டார். தற்போதும் அரசியல்வாதிகளை விமர்சிக்கக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளார். இதுதான் ரஜினியின் நாகரீக அரசியல். அந்த காலத்தில் காமராஜர் உள்ளிட்டோர் மற்ற ஆட்சியாளர்கள் குறை கூறாமல் அரசியல் செய்ததுதான் தற்போது நினைவுக்கு வருகிறது என்கிறது ரசிகர்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth says that dont criticise any politicians, dont do protest or anything, because somebody are there to do these. We dont want that kind of politics.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற