அரசியலுக்கு வருவதற்கு முன்பே வைகோவுக்கு ரஜினி கொடுத்த அசால்ட் பதிலடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நாளை அந்த முக்கியமான தகவலை வெளியிடுவதை உறுதி செய்தார் ரஜினி

  சென்னை : அரசியலுக்கு வருவதை விரும்பாத மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு நன்றி என்று கூறி ரஜினி பதிலடி கொடுத்துள்ளார்.

  ரஜினிகாந்த் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் அன்றைய தினம் முக்கிய அறிவிப்பு ஏதேனும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  ஆனால் தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் 31-ஆம் தேதி கூறுவேன் என்று அறிவித்திருந்தார்.

  ரஜினி நிலைப்பாடு

  ரஜினி நிலைப்பாடு

  இதுகுறித்து வைகோவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறுகையில் ரஜினியின் நிலைப்பாட்டை அறிய உலகமே ஆவலாக இருக்கிறது. அவர் அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை என்றார் வைகோ.

  மனதில் என்ன உள்ளது

  மனதில் என்ன உள்ளது

  ரஜினி அரசியலுக்கு நிச்சயம் வருவாரா என்ற கேள்விக்கு வைகோ பதிலளிக்கையில் ரஜினியின் மனதில் என்ன உள்ளது என்பது அவருக்கே தெரியாது என்றார். இந்நிலையில் இன்று 5-ஆவது நாளாக தனது ரசிகர்களை சந்தித்த தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து ரஜினி புறப்பட்டார்.

  வைகோவுக்கு பதிலடி

  வைகோவுக்கு பதிலடி

  அப்போது அரசியல் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினி இன்னும் ஒரு நாள் தான் பொறுத்திருங்கள் என்றார். மேலும் ரஜினியின் மனதில் என்ன உள்ளது என்பது அவருக்கே தெரியாது என்று வைகோ கூறுவது உங்களை வரவேற்காத கருத்தாக பார்க்கிறீர்களா என்ற கேள்விக்கு நான் அரசியலுக்கு வருவதை விரும்பாத வைகோவுக்கு நன்றி என்று கூறினார்.

  பதிலடியா அரசியல் நாகரீகமா?

  பதிலடியா அரசியல் நாகரீகமா?

  அரசியல் கட்சி தலைவர்களை சரிக்கு சரி விமர்சிக்கக் கூடாது என்பது ரஜினியின் எண்ணம். அதனால் இதுபோல் கூறினாரா. இல்லையெனில், தான் அரசியலுக்கு வருவது ரஜினிக்கே பிடிக்கவில்லையா என்ற கேள்விகள் உலா வருகின்றன. இது வைகோவுக்கு ரஜினி கொடுத்த பதிலடியாகவே பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth thanked Vaiko for not welcoming his political entry. He sa\ys this in Poes Garden house.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற