For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கிறார் ரஜினிகாந்த்.. நாளை தூத்துக்குடி பயணம்

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடிக்கு செல்கிறார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ரஜினிகாந்த் நாளை தூத்துக்குடி செல்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 100-ஆவது நாளை எட்டியது. இந்த போராட்டத்தை மேலும் வலுப்படுத்த மக்கள் பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர்.

Rajinikanth to visit Tuticorin

அப்போது 144 தடை உத்தரவையும் மீறி மக்கள் பேரணி சென்றதால் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

144 உத்தரவு நேற்று முன் தினத்துடன் திரும்பி பெறப்பட்டது. இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூற நாளை தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த். மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தும் அவர் ஆறுதல் கூறுகிறார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

English summary
Rajinikanth tomorrow going to Tuticorin to meet the Firing victims and the families of those who lost their lives for Sterlite.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X