முதலில் தமிழகத்தில்தான் சிஸ்டத்தை சரி செய்யணும்.. ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழகத்தில் தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்-ரஜினிகாந்த்- வீடியோ

  சென்னை: முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரி செய்வோம் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

  கடந்த ஆண்டு மே மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதை மறைமுகமாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

  இது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் சில அரசியல்வாதிகள் ரஜினி தனது படத்தை பிரமோட் செய்வதற்காக இதுபோல் ஸ்டென்ட் அடிக்கிறார். அவர் கட்சியெல்லாம் ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் தெரிவித்தனர்.

  கடந்த ஆண்டு ரஜினி அறிவிப்பு

  கடந்த ஆண்டு ரஜினி அறிவிப்பு

  கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் அரசியலில் ஈடுபடுவது உறுதி. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். சட்டசபை தேர்தலில் கட்சி ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

  இணையத்தில் மக்கள் மன்றம்

  இணையத்தில் மக்கள் மன்றம்

  ரஜினிகாந்த் கடந்த புத்தாண்டு அன்று இணையத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கினார். இதில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் அவர் தனது ரஜினி ரசிகர் மன்றத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் ரசிகர்களின் கருத்துக்கேற்ப அவரது சின்னமான பாபா முத்திரையில் தாமரையை நீக்கினார், பின்னர் பாம்பு சின்னத்தையும் நீக்கினார்.

  விவசாயத்துக்கு முக்கியத்துவம்

  விவசாயத்துக்கு முக்கியத்துவம்

  ரஜினிகாந்த் கட்சி தொடங்கியதும் விவசாயத்துக்கும், மீனவர்கள் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என்று தெரிகின்றனர். மேலும் நீர் நிலைகள் வரும் பாதையை முதலில் சரி செய்ய வேண்டும் என்பது ரஜினியின் பார்வையாக உள்ளது.

  கமலுடன் இணைந்து...

  கமலுடன் இணைந்து...

  சிஸ்டம் சரியில்லை என்றால் இந்தியாவிலா அல்லது தமிழகத்திலா என்று போயஸ் தோட்டத்தில் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கூறுகையில், முதலில் தமிழகத்தில் உள்ள சிஸ்டத்தை சரி செய்யவேண்டும். கமலுடன் இணைந்து பணியாற்றுவது என்பது காலம்தான் பதில் சொல்லும்.

  நாடாளுமன்றத் தேர்தல்

  நாடாளுமன்றத் தேர்தல்

  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் ரஜினி. முதலில் காலா அல்லது 2.0 ஆகிய படங்களில் எது முதலில் வெளியாகும் என்ற கேள்விக்கு 2.0 படத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடியவில்லை. எனவே எது முதலில் வெளியாகும் என்பது இன்னும் 2 நாட்களில் தெரியும் என்றார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth says that first of all he has to correct the system in Tamilnadu.Let we decide about to contest in Loksabha election.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற