உலகம் முழுவதும் புனித ரமலான் பண்டிகை இன்று உற்சாக கொண்டாட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் உற்சாகமாக உலகம் முழுவதுமாக கொண்டாடப்பட்டது. ரமலான் பண்டிகை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் களை கட்டியுள்ளது.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Ramadan celebrated across Tamil Nadu

பிரதமர் மோடி தம்முடைய வாழ்த்துச் செய்தியில், நாட்டின் வேறுபாடுகளே தனித்துவம்; பலம். ரம்ஜான் கொண்டாடும் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

இதனிடையே ரமலான் பண்டிக்கைக்கான முதல் பிறை நேற்று தெரிந்ததால் இன்று தமிழகத்தில் ரமலான் பண்டிகைக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் சென்னையில் அறிவித்தார். இதையடுத்து இன்று தமிழகம் முழுவதும் ரமலான் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை நடத்தப்படுகிறது. இந்த தொழுகைக்குப் பின்னர் இஸ்லாமிய மக்கள் ஒருவரை ஒருவர் தழுவி ஆரத் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இன்று தொழுகையில் பங்கேற்றனர். புத்தாடைகள் அணிந்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The festival of Ramzan was celebrated by Muslims across TamilNadu.
Please Wait while comments are loading...