For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யோகா தினம்... 32 அமைச்சர்களும் 32 விதமா வணக்கம் வைப்பாங்களோ- ராமதாஸ் கிண்டல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த யோகா தினத்தில் தமிழக அமைச்சர்கள், முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதவிதமாக வணக்கம் வைப்பார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் நக்கலடித்துள்ளார்.

தமிழக முதல்வரை கண்டால் அமைச்சர்கள் உள்ளிட்ட அக்கட்சியின் பிரமுகர்கள் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து நமஸ்காரம் செய்வது வழக்கம். மேலும், முதல்வரின் அருகில் சென்றால் மரியாதையை நிமித்தமாக குனிந்து, வளைந்து, நெளிந்து தான் செல்வார்கள். ஆனால், அமைச்சர்கள் யாரும் அவ்வாறு செய்யக் கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர்களின் கும்பிடு போஸ்களை வைத்து பலரும் கிண்டலடித்து வருகின்றனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்றைக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார். சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ பேசியதையும் கிண்டலடித்து பதிவிட்டுள்ளார் ராமதாஸ்

ராமதாஸ் கிண்டல்

அமைச்சர்களின் இந்த செயலை கிண்டலடிக்கும் விதத்தில், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சர்வதேச யோகா நாள்: அப்படியா... அப்ப தமிழக அமைச்சர்கள் 32 பேரும் 32 விதமாக முதலமைச்சரை வணங்கி சிறப்பிப்பார்களோ? என்று கேட்டுள்ளார்.

ராகுகாலம் சந்திராஸ்டமம்

ராகுகாலம் சந்திராஸ்டமம்

சட்டசபையில், அதிமுக எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா பேசும் போது, ''ஆளுநர் உரை, அம்மா காலண்டர் போல் உள்ளது என, ஸ்டாலின் கூறி உள்ளார். காலண்டரில் ராகு காலம், சந்திராஷ்டமம் இருக்கும். ராகு காலம் - தி.மு.க; சந்திராஷ்டமம் - காங்கிரஸ். இந்த இரண்டும் கூட்டணி அமைத்துள்ளன என்று கூறினார்.

விஜயதாரணி எதிர்ப்பு

விஜயதாரணி எதிர்ப்பு

இதற்கு, காங்கிரஸ் கொறடா விஜயதாரணி மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் கூறியதை, சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என, வலியுறுத்தினர். ஆனால், சபாநாயகர் மறுத்துவிட்டார்.

அஷ்டமத்து சனியா

திமுக ராகு காலம், காங்கிரஸ் சந்திராஸ்டமம் என்றால் அதிமுக என்ன அஷ்டமத்து சனியாக என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has hilariously slammed ADMK ministers on the eve of Yoda day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X