For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வண்டலூர் பூங்கா வரலாற்றிலேயே முதல்முறையாக 6 குட்டிகளை ஈன்ற மண்ணுளிப்பாம்பு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் அமைந்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் மண்ணுளிப்பாம்பு ஒன்று 6 குட்டிகளை ஈன்றுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான வனவிலங்குகள், உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இப்பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் மண்ணுளிப்பாம்பு ஒன்று கடந்த மாதம் 29 ஆம் தேதி அன்று 6 குட்டிகளைப் போட்டது.

அடை காத்து குட்டி:

இந்த பாம்புகள் முட்டையை வயிற்றுக்குள் அடைகாத்து குட்டி போடும் வகையை சார்ந்ததாகும். மண்ணுளிப்பாம்புகள் நிலத்தினுள் வாழக்கூடிய ஒரு பாம்பினமாகும்.

மண்ணில் வசிக்கும் பாம்பு:

மிக நேர்த்தியாகவும், விரைவாகவும் மண்ணை தோண்டக்கூடிய ஆற்றலை உடையது. நிலத்தில் காணப்படும் எலிகள், சுண்டெலிகள் போன்றவற்றை முதன்மை உணவாக கொண்டுள்ளது.

எலிகளின் எதிரி:

இந்த பாம்புகள் எலிகளை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்த பாம்புகள் விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது.

இருதலைப் பாம்பு:

வன உயிரின பாதுகாப்பு சட்டம் இந்த பாம்பின் தலை மற்றும் வால் ஒரே அளவிலும், ஒரே வடிவிலும் இருப்பதால் இருதலை பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது.

இருதலை பாம்பு நம்பிக்கை:

பாம்பாட்டிகள் ஒரு சிலர் இந்த பாம்பின் வால் பகுதியில் காயங்களை ஏற்படுத்தி வாய், கண் உள்ளது போன்று வடுக்களை ஏற்படுத்தி விடுகின்றனர். எனவே இந்த பாம்பை பார்க்கும் பொதுமக்கள் இருதலை பாம்பு என்றே நம்பி விடுகின்றனர்.

தவறான எண்ணங்கள்:

இந்த பாம்பு நக்கினால் தொழுநோய் வரும் என்பதும், 6 மாதங்களுக்கு ஒரு முறை தலைகள் மாறிமாறி இயங்கும் என்பதும் தவறான நம்பிக்கை ஆகும்.

கடத்தப்படும் பாம்புகள்:

பல்வேறு காரணங்களுக்காக மண்ணுளிப்பாம்புகள் கடத்தப்படுகின்றன. அவற்றில் துளியும் உண்மை இல்லை.

பாதுகாக்கப்பட்ட உயிரினம்:

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பாம்புகள் வன உயிரின பாதுகாப்பு சட்டம், 1972 இன் படி பாதுகாக்கப்பட்ட ஒரு உயிரினம் ஆகும்.

English summary
Rattle snake in Chennai zoo delivered 6 kids on last month. It is very valuable snake which is used as earth worm for save the soil quality.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X