For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரானைட் கிளைமேக்ஸ்: ஆபத்தைப் பற்றி அச்சமில்லை என்கிறார் சகாயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கிரானைட் குவாரிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகளைப் பற்றிய விசாரணை கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது. ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் இதுவரை ஏழு கட்ட விசாரணைகளை முடித்துவிட்டார். எட்டாவது கட்டமாக வரும் 27ஆம் தேதி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விசாரணை நடத்த உள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகள் குறித்து கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.

சகாயம் விசாரிக்க ஆரம்பித்ததில் இருந்து இதுவரை நேரிலும், தபாலிலுமாக வந்த மனுக்கள் 500-ஐ தொட்டுள்ளன. இந்த புகார்களைப் பற்றி களஆய்வு செய்தும் அறிக்கை தயாரித்துள்ளார்.

20 ஆண்டுகளாக

20 ஆண்டுகளாக

காணாமல் போன கண்மாய்கள், நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் 1995 முதல் 2005 வரை பணிபுரிந்த அதிகாரிகள் பட்டியல், ஒவ்வொரு துறை வாரியான இழப்புகள், உயிர்ப்பலி போன்ற விபரங்களை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

அதிகாரிகளுக்கு கேள்விகள்

அதிகாரிகளுக்கு கேள்விகள்

சகாயம் கேட்ட தகவல்களை வருவாய்த்துறை, நில அளவை, பொதுப் பணித்துறை, கனிம வளம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொல்லியல் மற்றும் காவல் துறையினர் தாக்கல் செய்தனர்.

சகாயம் கெடு

சகாயம் கெடு

சில துறைகளில் தகவல்களை சேகரிப்பதில் தாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது. உயர்நீதிமன்றஉத்தரவுப்படி வருகிற மார்ச் மாதத்தில் சகாயம் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதனால் வருகிற 28-ஆம்தேதிக்குள், தகவல்களை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சகாயம் ‘கெடு' விதித்து உள்ளார்.

குவாரி அதிபர்களிடம் விசாரணை

குவாரி அதிபர்களிடம் விசாரணை

கிரானைட் அதிபர்களிடம் நேரில் விசாரிக்க முடிவெடுத்த சகாயம், பி.ஆர்.பி.முருகேசன், பி.ஆர்.ராஜ​சேகரன், ஒலிம்பஸ் கிரானைட்ஸ் துரை தயாநிதி ( அழகிரியின் மகன்), கோட்டை வீரன், சோலை ராஜா, பெரிய​கருப்பன், செந்தில்குமார், தீபா கிரானைட்ஸ் உரிமை​யாளர், ரபிக்ராஜா, கோர​மெண்டல் ஏஜென்சி, காசனியா கிரானைட்ஸ், லட்சுமி கிரானைட்ஸ், விஜயா கிரானைட்ஸ் என்று மொத்தம் 17 நபர்களுக்கு சம்மன் அனுப்பினார்.

வக்கீல்கள் வக்காலத்து

வக்கீல்கள் வக்காலத்து

கடந்த வாரம் மேலூரைச் சேர்ந்த கோட்டை​​வீரன் என்பவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். கோட்டைவீரனுக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் ராஜசேகரன் சகாயத்தின் முன்பு ஆஜரானார்.''கோட்டைவீரன் வெளியூர் சென்றிருக்கிறார். அவருக்கு இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும்' என்று வழக்கறிஞர் கேட்டார். ''அவர் விசாரணைக்கு வரவில்லை என்றால் அவருக்கு நீங்கள் வக்காலத்து கொடுங்கள்!' என்று சகாயம் கேட்டார். ''நான் தகவல் சொல்வதற்காகத்தான் வந்தேன். மதியம் கொண்டு வருகிறேன்' என்று கூறிவிட்டுச் சென்றார் வழக்​கறிஞர் ராஜசேகரன்.

கைதான சோலைராஜா

கைதான சோலைராஜா

கிரானைட் மோசடி முறைகேடு வழக்கில் கடந்த வாரம் மணல் படிக்காசு கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர்தான் சோலை​ராஜா. தற்போது சோலை​ராஜா சிறையில் இருப்பதால், அவருக்காக அவரது வழக்கறிஞர் மாயழகு ஆஜராகி தகவல் சொன்னார். அந்தக் காரணத்தை எழுதிக் கொடுக்கச் சொன்னார் சகாயம். வழக்கறிஞரும் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

பி.ஆர்.பி நிறுவனத்தில்

பி.ஆர்.பி நிறுவனத்தில்

இரண்டாவது நாள் பி.ஆர்.பி மற்றும் அவரது மகன் செந்தில்குமார், அவரின் மைத்துனர் முருகேசன் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் அருண்பிரசாத் ஆஜரானார். ''நீங்கள் எப்படி எங்​களை அழைக்கலாம்? உங்களுக்கு எங்களை அழைத்து விசாரிக்க எந்த அதிகாரமும் இல்லை. சட்டத்திலும் இடம் இல்லை!' என்று கேட்டார் வழக்கறிஞர்.

அறிக்கை சமர்ப்பிப்பேன்

அறிக்கை சமர்ப்பிப்பேன்

ஆனாலும் அசராத சகாயம், 'இது உயர் நீதிமன்றம் அமைத்த கமிஷன். நான் உங்களை விசாரிக்காமலேயே எனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம். ஆனால், அப்படிச் செய்தால் ஒருதலைபட்சமாக விசாரித்து அறிக்கை அனுப்பியதாக சர்ச்சைகள் வரும். அதனால்தான் முறைப்படி சம்மன் அனுப்பி உங்களின் பதிலை கேட்கிறேன் என்றார். 'வழக்கு கோர்ட்டில் நடப்பதால் இப்போது எதுவும் பேச முடியாது' என்று சொன்னார் அருண்பிரசாத். இதேபோல அனைத்து நிறுவனங்கள் சார்பிலும் வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜரானார்கள்.

வழக்கு தள்ளுபடி

வழக்கு தள்ளுபடி

அழகிரி மகன் துரை தயாநிதி தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில், ''எங்களை விசாரிக்க சகாயம் கமிஷனுக்கு உரிமை இல்லை. அவர் பப்ளிசிட்டிக்காக இதைச் செய்கிறார். எங்களிடம் விசாரணை நடத்த அவருக்குத் தடைவிதிக்க வேண்டும். ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வழக்குகள் எங்கள் மீது தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அப்படி இருக்க, இது தேவை இல்லாத விசாரணை' என்று மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள்

ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள்

கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அளித்துள்ள புகார்களில் மதுரையில் இருந்த ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் என்று சிலரது பெயர்களும் இருக்கிறதாம். அவர்களுக்கும் கூடிய சீக்கிரம் சகாயம் சம்மன் அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அச்சப்படமாட்டேன்

அச்சப்படமாட்டேன்

கிரானைட் குவாரிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகளைப் பற்றி விசாரிப்பதால் சகாயம் உயிருக்கு ஆபத்து நேரிட வாய்ப்பு உள்ளது என்றும் எனவே அவர் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் கடந்த நான்கு மாதகாலமாகவே மதுரையில் எத்தனையோ இடர்களை சந்தித்து விசாரணை நடத்தியுள்ள சகாயம், எனக்கு எதுவும் ஏற்படாது, ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி என்று கூறி கூலாக அறிக்கை தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்.

சகாயம் அறிக்கையில் என்னென்ன குண்டுகள் இருக்கிறதோ? அது எப்படி வெடிக்குமோ? என்று கிரானைட் குவாரி அதிபர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

English summary
I Am Readyto Face the Risks in Granite Mining Scam Probe Says IAS Officer U Sagayam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X