தேடப்பட்டு வந்த சென்னை ரவுடி பர்மா பாண்டி சிவகங்கையில் கைது

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை : பல்வேறு கொலை கொள்ளை சம்பவங்களில் தேடப்பட்டு வந்த சென்னை ரவுடி பர்மா பாண்டியை சிவகங்கையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் பிரபல ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 70க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் கடந்த வாரம் அதிரடியாக செயல்பட்டு கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவான ரவுடி பினுவும் நேற்று முன்தினம் போலீஸில் சரணடைந்தார்.

 Rowdy Burma Pandi arrested by Sivaganga police

இந்நிலையில், சிவகங்கையில் இளையான்குடி புற நகர்ப்பகுதியில் காரில் வந்த ஒரு கும்பல் அங்கிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு தப்பி சென்றது. அந்தக் காரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் காரில் இருந்த நபர் பல்வேறு கொலை கொள்ளைச் சம்பவங்களில் தேடப்பட்டு வந்த சென்னை ரவுடி பர்மா பாண்டி என்பதும், ஏற்கனவே பலமுறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் பாண்டியிடம் இருந்து பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rowdy Burma Pandi arrested in Sivaganga. Rowdy Burma Pandi who is a accused in many robbery and Murder case caught by sivaganga police yesterday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற