என் ஆளை எப்படி கூப்பிடலாம்... தட்டிக்கேட்ட ரவுடியை வெட்டிக்கொன்ற கும்பல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கொருக்குப்பேட்டையில் பிரபல ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வண்ணாரப்பேட்டை அடுத்த பேசின் பிரிட்ஜை சேர்ந்தவர் சரவணன் என்ற வெள்ளை சரவணன்,30. பிரபல ரவுடியான இவர் மீது அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Rowdy hacked to death in Chennai

நேற்று கொருக்குபேட்டை மீனாம்பாள் நகரில் சென்று கொண்டிருந்த சரவணனை 3 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தது.

தப்பி ஓடிய சரவணனை அந்த கும்பல் விரட்டி சென்று சராமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த சரவணன் அதே இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரவணன் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ரவுடி சரவணன் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஜீனத் என்பவருடன் தொடர்பு வைத்துள்ளார். ஒரு வழக்கு தொடர்பாக சரவணன் சிறை செல்லவே, கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த தென்னரசு, இளவரசு, அரசு ஆகியோர், தங்களுடன் உல்லாசமாக இருக்க ஜீனத்தைஅழைத்துள்ளனர்.

சிறையில் இருந்து வெளியில் வந்த சரவணனிடம் இந்த தகவலை ஜீனத் தெரிவிக்கவே, சரவணன் கோபமடைந்தார். அவர்களை தேடிச்சென்று சரவணன் கண்டித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த அந்த மூவரும் சேர்ந்து சரவணனை வெட்டி கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். தப்பியோடிய மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An armed gang chased and hacked to death a man in broad daylight on a busy street at korukku pettai in Chennai today around 12.30 pm. The victim, J Vijayakumar, who was facing several criminal cases, was said to be returning after appearing in court when he was intercepted by the gang.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற