For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமரியில் ரப்பர் பூங்கா அமைப்பது தொடர்பாக பரிசீலனை - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரப்பர் பூங்கா அமைவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில்தான் ரப்பர் சாகுபடி நடந்து வருகிறது. ஆகவே மாவட்டத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் ரப்பரை ஒட்டியே இருந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் பயிரிடப்பட்டு வருகிறது. ஆகவேதான் இங்கிருந்து உலகத்தரம் வாய்ந்த ரப்பர் உற்பத்தி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், அரசு ரப்பர் கழகம் மூலம் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டு, உற்பத்தியும் நடந்து வருகிறது.

Rubber park government consider says Forest Minister

கீரிப்பாறை, காளிகேசம், குற்றியாறு, மணலோடை, கோதையாறு, சிற்றாறு, மயிலாறு டிவிஷன்களில் அரசு ரப்பர் கழகம் அதிகம் ரப்பர் பயிரிட்டுள்ளது.
இந்தியாவில் ரப்பர் உற்பத்தியில் கேரளமாநிலம் முதலிடம் வகிக்கிறது. தற்போது சீனாவில் இருந்து ரப்பர் இறக்குமதியாவதால் இங்குள்ள ரப்பர் தோட்டத்தொழிலாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அம்மாநிலத்தில் ரப்பருக்கு பதில் மாற்றுத்தொழிலை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கீரிபாறை அரசு ரப்பர் தோட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் ரப்பர் விலை வீழ்ச்சியை தடுக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து ரப்பர் இறக்குமதி செய்வதை மத்திய அரசுடன் கலந்து பேசி அதனை தடுப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், மேலும் குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரப்பர் பூங்கா அமைவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.

Rubber park government consider says Forest Minister

ரப்பர் சாகுபடி நடைபெறுகின்ற குமரி மாவட்ட பகுதியில் ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைக்க குமரி மாவட்டம் ஏற்ற பகுதியாகும். இங்கு ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைத்தால் ரப்பர் சாகுபடியில் மேம்பாடும் ஏற்படும் வகையில் புதிய இனங்களை உருவாக்கவும், அதன்மூலம் அதிக உற்பத்தியைப் பெறவும் முடியும். மேலும் கூடுதல் வேலை வாய்ப்புகளும் உருவாகும். குமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைக்க தக்கலையை அருகே உள்ள வேளிமலை பகுதியில் 230 ஏக்கர் நிலம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை, ரப்பர் பூங்கா, ரப்பர் ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவதின் மூலம் ரப்பர் சாகுபடி மேம்பாடு அடைவதுடன் தொழில் வளம் பெருகி வேலை வாய்ப்புகளும் ஏற்படும் என்பது ரப்பர் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

English summary
Forest Minister Dindigul Srinivasan has visited kanyakumari rubber forest. He said press person, government consider rubber park in Kanyakumari district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X