For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவ கவுன்சிலிங்கில் குவிந்த கிராமப்புற மாணவர்கள்- கல்வி கட்டணத்துக்கு பெரும்பாடுபட்ட சோகம்!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மருத்துவ கவுன்சிலிங்கில் ஏராளமான கிராமப்புற மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர். தன்னார்வலர்கள் உதவியுடன் கல்வி கட்டணத்தை இந்த ஆண்டு செலுத்திவிட்டாலும் விடுதி கட்டணம், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்துக்கு உதவும் நல்ல உள்ளங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள் வருங்கால மருத்துவர்கள்...

Rural Studens in Medical Counselling

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் எம்பிபிஎஸ் பொதுப்பிரிவினருக்கான சேர்க்கைக்கான 3-வது நாள் கலந்தாய்வு இன்றும் நடைபெற்றது. நேற்றைய கலந்தாய்வில் 750 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதில் 197.50 கட்ஆப் எடுத்தவர்கள் முதலில் அழைக்கப்பட்டனர். அந்த கட்ஆப்பில் உள்ளவர்களுக்கான இடங்கள் காலை 10 மணிக்கே நிரம்பின. பின்னர் 197.25 கட்ஆப் எடுத்தவர்கள் அழைக்கப்பட்டனர். இந்த கட்ஆப்பில் 10.30 மணிக்கெல்லாம் அரசு கல்லூரிகளில் உள்ள ஒசி, பிசி, இடங்கள் நிரம்பிய நிலையில் எஸ்சி, எஸ்டி, எம்பிசி இடங்களுக்கான மாணவர்கள் அழைக்கப்பட்டனர்.

இதில் பெரும்பாலானவர்கள் தென் மாவட்ட கிராமங்களை சேர்ந்தவர்களே. அதிலும் நடுத்தர குடும்பங்கள், ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவியரே அதிக அளவில் கவுன்சலிங்குக்கு வந்திருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையும் கல்வி கட்டணங்களுக்கான எதிர்பார்ப்பும் நெஞ்சை பிழியத்தான் செய்கின்றன..

English summary
Rural Students who attend Medical Counselling struggle for their fees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X