மகரவிளக்கு பூஜை - சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
சபரிமலை மகரவிளக்கு பூஜை நாளை நடை திறப்பு-வீடியோ

திருவனந்தபுரம்: மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. ஜனவரி14ஆம் தேதி பிரசித்திப் பெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 15ஆம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின.

Sabarimala Iyappa temple to open tomorrow for Makaravilakku

41 நாள் நீண்ட மண்டலக் காலம் கடந்த 26ம் தேதி நடந்த மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. அன்று இரவு கோயில் நடை சாத்தப்பட்டது.

3 நாள் இடைவெளிக்கு பின்னர் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 31ம் தேதி முதல் மகர விளக்கு பூஜைகள் தொடங்கும். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெறும்.

ஜோதி வடிவில் ஐயப்பன் ஐயப்பன் மகர ஜோதியாக பக்தர்களுக்கு வருகிற 14ஆம்தேதி தரிசனம் அளிக்கிறார். இதனை தரிசிக்க பக்தர்கள் இருமுடி கட்டி கோவிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

மகர விளக்கு பூஜையின் போது பந்தளம் ராஜகுடும்ப ஆபரணங்கள் அணிந்து ஐயப்பன் தரிசனம் அளிப்பார். அப்போது சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி அளிப்பார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Sabarimalai Ayyappan Temple Makaravilakku is on January 14,2018.The Lord Ayyappa temple at Sabarimala will be opened for the Makaravilakku festival on Saturday afternoon.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற