நான் அரசியலுக்கு வந்துவிட்டேன்.. சகாயம் ஐஏஎஸ் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் ஊழலை எதிர்த்த அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்தார்.

கருங்கல் (கிரானைட்) மற்றும் கனிம மணற் கொள்ளை பற்றி விசாரிக்க சகாயம் தலைமையில் விசாரணைக்குழு அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

Sagayam IAS says that he already involved in politics

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் குழு விசாரணை நடத்திய போது, நரபலி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. நரபலி கொடுத்த சுடுகாட்டில் சடலத்தை தோண்டி எடுக்க போலீசார் ஒத்துழைக்கவில்லை. இரவு நேரம் எனக் கூறி போலீசார் அலைக்கழித்தனர்.

எனினும் அசராத சகாயம் குழுவினர் இரவு எத்தனை மணி நேரமானலும், புகாரில் குறிப்பிட்ட இடத்தை தோண்டி எடுத்து உடலை ஆய்வு செய்த பிறகே இங்கிருந்து செல்வோம் எனக் கூறி சுடுகாட்டிலேயே முகாமிட்டு தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் தனக்கு சுடுகாட்டில் படுக்க பயமில்லை. ஆனால் சுதந்திர நாட்டில் இருக்கத்தான் பயமாக இருக்கிறது என்றார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்று தகவல்கள் பரவிய நிலையில் தற்போது அரசியலுக்கு குறித்து அவர் கருத்து கூறியுள்ளார்.

அதில் ஊழலை எதிர்த்த அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன். நான் அரசியலுக்கு வந்துள்ளதை சமூகம் உறுதி செய்யும்

வணிகம் செய்பவர்கள் சூழ்ச்சி கொண்டவர்கள் ; அவர்கள்தான் ஆள்கிறார்கள் என்றார் சகாயம் ஐஏஎஸ்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sagayam IAS says that whenever he opposes Corruption, he has come to Politics.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற