என் மீதான புகார் ஆவணங்களை தாங்க.. பிரமாண பத்திரம் தாக்கல் செய்றேன்.. விசாரணை கமிஷனில் சசிகலா மனு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புகார் கொடுத்தவர்கள் அளித்த ஆவணங்களை கொடுக்குமாறு ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜெயலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் ஜெயலலிதாவுடன் தொடர்புடையவர்களிடம் விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.

கேள்வி கேட்ட சசி

கேள்வி கேட்ட சசி

இந்நிலையில் மவுன விரதம் இருப்பதாக கூறி விசாரணை ஆணையத்தில் ஆஜராக மறுத்த சசிகலா தன் மீது புகார் அளித்தவர்கள் யார் என நீதிபதியிடமே கேள்வி கேட்டார் சசிகலா.

சாட்சியங்களின் ஆவணங்கள்

சாட்சியங்களின் ஆவணங்கள்

இந்நிலையில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்வது தொடர்பாக விசாரணை ஆணையத்தில் சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன் மீது புகார் அளித்த 22 சாட்சியங்கள் வழங்கிய ஆவணங்களையும் தன்னிடம் தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆவணங்கள் கிடைத்தால்

ஆவணங்கள் கிடைத்தால்

ஆவணங்களை அளித்தால் 10 நாட்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்றும் சசிகலாவின் வழக்கறிஞர் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததாக குறிப்பிட்டதை நீக்க வேண்டும் என்றும் சசிகலாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

7 நாட்கள் அவகாசம்

7 நாட்கள் அவகாசம்

குறுக்கு விசாரணையை தொடங்குவதற்கு 7 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் சசிகலா தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் பிரமாணப் பத்திதரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பபிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala filed a petition in Arumugasami commission. Sasikala has filed a petition in the Arumugasamy Commission to hand over the documents of complainants against her.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற