ஆபத்தான அரசுப்பள்ளி... மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர் காயம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நல்லவன்பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நல்லவன்பட்டி என்ற கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் 60 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் உள்ளனர்.

School ceiling broken and fallen on a student

இந்நிலையில் நேற்ரு திடீரென பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இடிந்த கான்கிரீட்டின் ஒரு பகுதி சக்திவேல் என்ற மாணவர் மேல் விழ அவர் தலைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பள்ளி தரமற்ற பொருட்களால் கட்டப்பட்டதால் தான் கூரை இடிந்துவிழுந்துள்ளது என ஊர்மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், பள்ளிக் கட்டடத்தை சரிசெய்யும் வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Nallavanpatti middle school, ceiling wall broken and fallen on a student and he injured. People of the village protesting to repair the building.
Please Wait while comments are loading...