சென்னை: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்கு பிறகு இன்று வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் உற்சாகத்துடன் கிளம்பினர்.
அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் மாத மத்தியில் நடத்தப்பட்டன. இதையடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டன.

இதையடுத்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தங்களது பள்ளி நண்பர்களை பார்க்கும் உற்சாகத்தில் குழந்தைகள், மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.
இத்தனை நாட்கள் காலை பரபரப்பின்றி இருந்த தாய்மார்களும் இன்று முதல் குழந்தைகளுக்கு உணவு தயாரித்தல், பள்ளிக்கு கிளப்பிவிடுதல் என பரபரப்பாக இயங்கினர்.
பள்ளிகள் திறப்பால் இரு சக்கர வாகனம், பள்ளி பேருந்து, வேன்கள் இயங்குவதால் சென்னை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!