எங்கே போனீர்கள்.. என்ன செய்தீர்கள்.. ஏன் பேசலை.. ஏன் கேட்கலை.. ரஜினி மீது பாயும் கேள்விக் கனைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் கூட்டாக பேட்டி- வீடியோ

  சென்னை: பொழுதுபோகலைனா இமயமலைக்கு போங்க, தேவையில்லாமல் களத்துக்கே வராமல் பேசாதீர்கள் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் ரஜினியை கடுமையாக சாடியுள்ளனர்.

  இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிராஜா, சீமான், அமீர் உள்ளிட்டோர் ரஜினி முன் வைத்த கேள்விகளின் தொகுப்பு:

  • ஆந்திராவில் 20 தமிழர்களை சீருடை அணிந்த போலீஸ் சுட்டுக் கொன்றதே அப்போது எங்கே போனார் ரஜினி
  • கர்நாடகாவில் இருந்து லட்சக்கணக்கானோர் அகதிகளாக அடித்து விரட்டப்பட்டது வன்முறை இல்லையா?
  Seeman and more asks some questions for Rajini
  • களத்துக்கு வந்து பார்க்காமல் கூட்டத்தில் நசுங்கி வேர்வை சிந்தாமல் பேசுவது எப்படி சரியாக இருக்க முடியும்?
  • போராட்டத்தில் பங்கேற்ற என் தங்கைகளின் நெஞ்சில் கை வைத்து சீருடை அணிந்த போலீஸ் தள்ளிவிட்டது வன்முறை இல்லையா?
  • உங்களுக்கு பொழுதுபோகவில்லை எனில் இமயமலைக்கு போக வேண்டியதுதானே? தேவையில்லாத பேச்சு எதற்கு?
  • எங்கள் மீதான தாக்குதல்கள் வன்முறையாக தெரியவில்லையா?
  • வீடியோவை பாருங்க.. காவலர்களை நான் தானே விலக்கி விட்டேன்? அதில் எங்கே இருக்கிறது வன்முறை? (சீமான்)
  • ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்ற நிலையில் சீருடை அணிந்த காவலர்கள் தாக்கினார்களே? அது வன்முறை இல்லையா? அதை கண்டித்தீர்களா?
  • போராட்டத்தின் என்னை கைது செய்தனர், அதை ரஜினி கேட்கவில்லையே ஏன்? (பாரதிராஜா)
  • ரஜினியின் டுவிட்டர் பதிவு அதிகார வர்க்கத்துக்கு ஆதரவாகத்தானே உள்ளது?
  • போராட்டக்களத்திற்கு வந்தால்தான் காவலர்கள் யார் என்பது பற்றி ரஜினிகாந்திற்கு தெரியவரும்.

  ரஜினி பதில் சொல்வாரா... டிவிட்டரில் விழி வைத்துக் காத்திருப்போம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Seeman and more asks some question for Rajini as he supports public attack on police.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற