அதிமுக அரசு இருக்குமா? இருக்காதா? செங்கோட்டையன் திடீர் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அதிமுக அரசு இருக்குமா? -இருக்காதா? என நிறைய பேர் தங்களது எண்ணங்களை கூறி வருகிறார்கள். அவர்கள் என்ன கூறினாலும் அதுபற்றி கவலையில்லை. இந்த அரசு நிச்சயமாக நான்கரை ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள வேளாண்மை உற்பதியாளர்கள் விற்பனை சங்க ரேசன் கடையில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

senkottaiyan speaks about admk government

அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசின் நீண்ட நாள் கனவான ஸ்மார்ட் கார்டு திட்டம் தற்பொழுது நிறைவேறியுள்ளது என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் இந்த திட்டத்திற்கு வித்திட்டவர் எனவும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த அரசு இருக்குமா? -இருக்காதா? என நிறைய பேர் தங்களது எண்ணங்களை கூறி வருகிறார்கள். அவர்கள் என்ன கூறினாலும் பரவாயில்லை, அதுபற்றி கவலையில்லை. அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, இந்த அரசு நிச்சயமாக நான்கரை ஆண்டு தொடர்ந்து நீடிக்கும். இது உறுதி என்றார் செங்கோட்டையன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister senkottaiyan speaks about admk government
Please Wait while comments are loading...