கலெக்டர் ஆபீஸில் தாசில்தார் தாக்குதல்.... வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் போராட்டம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாசில்தார் மற்றும் துணை தாசில்தாரை தாக்கப்பட்டதைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகங்களில் பணிபுரிந்து வருபவர்களை வருடாவருடம் இடம் மாற்றம் செய்வதைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் மலர்விழி அழைத்ததன் பேரில் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் பேச்சு வார்த்தைக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர்.

அங்கு மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை முடித்து வெளியேறும்போது அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த சிலர் தாசில்தாரையும் துணை தாசில்தாரையும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலைக் கண்டித்து அனைத்து வட்டாட்சி அலுவலகங்களின் முன்பும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Sivaganga collectorate Thasildar and Deputy Thasildhar attacked and they staged protest in every Thasildar office
Please Wait while comments are loading...