சிவகங்கை மாவட்டத்தில் 976 பேருக்கு டெங்கு காய்ச்சல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நோயாளியிடம் வணிகம் செய்யும் தனியார் மருத்துவமனைக்கு ஆட்சியர் எச்சரிக்கை-வீடியோ

  சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 8200 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 976 பேருக்கு டெங்குக் காய்ச்சல் என மாவட்ட ஆட்சியர் லதா தெரிவித்துள்ளார்.

  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் லதா காரைக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது குழந்தைகள் வார்டில் கொசுவலை இல்லாமல் இருப்பதைக் கண்டதும், குழந்தைகளின் படுக்கைகளுக்கு கொசு வலை போட வேண்டும் என மருத்துவர்களைக் கண்டித்தார்.

  Sivaganga district collector Latha told the statistics of dengue affected

  பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 8200 பேர் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 976 பேருக்கு டெங்குக் காய்யச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது என்று கூறினார். மேலும், தனியார் மருத்துவமனைகளில் டெங்குவுக்கு அதிக கட்டணம் வசூலிக்கபப்ட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

  மேலும், தற்போது சிவகங்கை மாவட்டம் முழுவதும் தற்போது 35 பேர் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறினார். ஆனால் டெங்கு மரணங்கள் குறித்து அவர் எந்த புள்ளிவிவரங்களும் கூறவில்லை.

  ஆனால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட அனைத்து எதிர்க்கட்சியினரும் அரசு டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து உண்மை புள்ளி விவரங்களை மறைத்து வருகிறது என குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Sivaganga district collector Latha told the statistics of dengue affected in her district.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற