காரைக்குடி பியூட்டிஷியனின் ஜாலி லைஃப்.. சிவகங்கை காதலன் தந்த மறக்க முடியாத பரிசு.. பாவம் அந்த பொண்ணு
சிவகங்கை: சிவகங்கை பியூட்டிஷியன் ஒருவர், உயிருக்கு உயிராக இளைஞரை காதலித்து வந்துள்ளார். அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பி நெருங்கி பழகி உள்ளார்.. ஆனால், காதலன் செய்த செயலால் மனம் நொந்துப்போய், அதிர்ச்சி முடிவை எடுத்துவிட்டார்.. இதுகுறித்த விசாரணையை மகளிர் போலீசார் தீவிரமாக நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது சிவகங்கை காரைக்குடியில்?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. 28 வயதாகிறது.. எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும், தன்னால் முடிந்த அளவுக்கு போராடி சென்னையில் ஒரு பியூட்டி பார்லரை நடத்தி வருகிறார்.. எனினும் எதிர்பாராத விதமாக காதலில் விழுந்தார் இந்த பெண்.

சிவகங்கை காரைக்கால்
5 வருஷத்துக்கு முன்பு கல்லல் பக்கத்தில் உள்ள வெற்றியூரில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்க இளம்பெண் வந்துள்ளார்.. அப்போதுதான் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் அறிமுகமாகி உள்ளது.. நட்புடன் பேச துவங்கி அதுவே சில வாரங்களில் காதலானது..
ஒருகட்டத்தில் காதலிக்காக, அந்த இளைஞர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைஸசாக வேலைக்கு சேர்ந்துள்ளார்.. இதனால் இருவரும் சேர்ந்து சென்னையிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வாழ ஆரம்பித்தார்கள்... 5 வருடங்கள் கணவன் - மனைவி போல் இல்லறத்தையும் நடத்தி வந்தனர்.
பியூட்டிஷியன் காதலன்
இந்த சூழலில், காதலனுக்கு வீட்டில் பெண் பார்ப்பதாக இளம்பெண்ணுக்கு தெரியவந்தது.. உடனே இதுகுறித்து காதலனிடம் கேள்வி கேட்கவும், "நான் ஊருக்கு போய் என் அப்பா, அம்மாவை சமாதானம் செய்கிறேன், ஆனால் நீதான் என் மனைவி" என்று சொல்லிவிட்டு போனார்.. ஆனால் அதற்கு பிறகு அவர் திரும்பவே இல்லை..
அடுத்த சில நாளில், காதலனுக்கு திருமணம் என்ற தகவல் கிடைத்ததுமே, பெண்ணுக்கு தலையே சுற்றிவிட்டது.
உடனே விராலிமலைக்கு ஓடினார்.. அங்கே தடபுடலாக திருமணம் நடந்து கொண்டிருந்தது.. ஆவேசத்துடன் உள்ளே நுழைந்து, பெண் வீட்டாரிடம் தன்னுடைய காதல் குறித்தும், வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வருவது குறித்தும் கண்ணீருடன் கூறினார்..
பாவம் அந்த பொண்ணு
5 வருடங்களாக தனக்கும் அந்த இளைஞருக்கும் உள்ள காதலை விலாவரியாக சொன்னார்.. தம்பதி போல் வாழ்ந்து வந்த தங்களுக்கு திருமணத்தை நடத்தி வைக்குமாறும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்..
இதைக்கேட்டு மண்டபத்தில் இருந்தவர்களும், திருமண வீட்டினரும் அதிர்ச்சி அடைந்தனர்.. உடனடியாக அந்த திருமணமும் நிறுத்தப்பட்டது.
இந்த பரபரப்பு நடந்து கொண்டிருந்தபோதே மாப்பிள்ளை மிஸ்ஸாகி விட்டார். காதலனிடம் தனியாக பேச வேண்டும் என்று அவரை மண்டபத்தில் இளம்பெண் தேடியபோதுதான், அவர் மாயமாகி இருந்தது தெரியவந்தது..
அதாவது மணமகன் குடும்பத்தினர், "அரசியல் பிரமுகர் ஒருவரின் உதவியை நாடவும், மணமகனை ரகசியமான இடத்துக்கு அந்த விஐபி மாற்றிவிட்டார்களாம்.. இதை கேள்விப்பட்டு இளம்பெண் மேலும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார்.
விசாரணை தீவிரம்
எப்படியாவது நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி, தானே திருமணம் செய்து கொள்ளலாம் என்று எதிர்பார்த்து வந்தவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைக்கவும், நொந்துப்போன அந்த பெண் தற்கொலைக்கு முயன்று தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டார்..
எனினும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. தற்போது அங்கு ஆபத்தான முறையில் இளம்பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே கல்யாண மண்டபத்தில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து தேவகோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் இரு குடும்பத்தாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்..
ஆனால், இளம்பெண் ஒருவர், ஆவேசமாக கேள்விகளை எழுப்பி, தற்கொலைக்கும் முயன்ற சம்பவம் அந்த விராமலை கிராமத்தையே பதற செய்துவிட்டது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications