For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமேஸ்வரம் வனப்பகுதியில் பதுங்கியிருந்த இலங்கை நாட்டவர் 6 பேர் கைது

By Veera Kumar
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் வனப்பகுதியில் பதுங்கியிருந்த இலங்கையை சேர்ந்த ஆறுபேரை தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இலங்கை தலைமன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிலர் ராமேஸ்வரம் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இலங்கையை சேர்ந்த ஆறுபேர் சிக்கினர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி கூறுகையில், பைபர் போட்டுகள் மூலமாக தமிழகத்துக்குள் வந்த இலங்கையை சேர்ந்த இந்த ஆறுபேரும் 10 கிலோ கஞ்சாவை கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறினார்.

இந்தியாவில் இருந்து கஞ்சாவை கடத்திச் சென்று, அதற்கு பதிலாக இலங்கையில் தங்கத்தை பெறும் சம்பவங்கள் அவ்வப்போது ராமேஸ்வரம் எல்லையில் நடப்பதாக கூறப்படுகிறது.

English summary
The Q Branch Police has arrested six Sri Lankans, who were found hiding in the "Casurina" jungle in this island. All the six, arrested last night, hailed from Talaimannar district of Sri Lanka, Kennedy Inspector of Police said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X