For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூண்டில் வளர்த்த கோழிகளைக் கொன்ற ”நல்லது”- காட்டில் விட்ட வனத்துறையினர்

Google Oneindia Tamil News

செஞ்சி: செஞ்சி கிராமம் ஒன்றில் புகுந்த பாம்பு கூண்டில் வளர்க்கப்பட்ட கோழிகள் அனைத்தையும் கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சியை அடுத்த நரசிங்கராயன் பேட்டையை சேர்ந்த நாசர். இவர் தனது வீட்டின் பின்புறம் இரும்பு வலைகளை அமைத்து கோழிக்கூண்டு வைத்து கோழிகளை வளர்த்து வருகிறார்.

நேற்று காலை நல்லபாம்பு ஒன்று கோழி கூண்டு அருகே வந்து உள்ளே இருந்த கோழிகளை கடித்துவிட்டு கூண்டு அடியில் புகுந்து கொண்டது. இதனால் 4 கோழிகளும் இறந்து விட்டன.

இதுகுறித்து நாசர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். வனவர் இமயராஜ், வனக்காப்பாளர் குணசேகர், வனக்காவலர்கள் லட்சுமணன், ராஜேந்திரன் ஆகியோர் விரைந்து சென்று கோழிக்கூண்டின் அடியில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பை உயிருடன் பிடித்து செஞ்சி காப்புக்காட்டில் விட்டனர்.

English summary
Gingee area man's hens bite by Snake. Forest safety officers caught that snake and leave it in forest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X