சொத்துக்காகத் தாயைக் கொன்ற மகன்...விஷமருந்தி தற்கொலை - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகில் லாரி அதிபர் விஜயகுமார் சொத்துக்காகத் தாயைக் கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் புதுக்காட்டுப் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல லாரிகளை சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார்.

 Son killed his beloved mother and committed suicide

இன்னும் சில லாரிகள் வாங்கி தொழிலை விருத்தி செய்ய ஆசைப்பட்டார் விஜயகுமார். அதற்காக, தன் தாயின் பெயரில் இருக்கும் பல லட்சம் ரூபாய் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றித் தரச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் தாயார் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், தன் தாயாரைக் கொன்றுவிட்டு, பிறகு அவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

சொத்துக்காகத் தாயைக் கொன்றுவிட்டு, தானும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Near by Gopi, Erode Lorry owner killed his mother for property. And he committed suicide.
Please Wait while comments are loading...