For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முடங்கிப் போன "இரட்டை இலை".. எப்படி "உயிர் வாழ" முடியும்.. பெரும் கலக்கத்தில் தென் மாவட்ட அதிமுக!

Google Oneindia Tamil News

நெல்லை: எம்.ஜி.ஆர். கண்ட இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதால் தென்மாவட்ட அதி்முக பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளனராம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக உடைந்தது. இதில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும் தனியாக பேரவை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் கட்சியின் பொது குழுவால் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட பொது செயலாளர் நியமனம் செல்லாது என அறிவிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் மைத்ரேயன் எம்பி புகார் அளித்தார். இந்த மனுக்கு சசிகலா பதில் அளித்தார்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்

இந்நிலையில் ஆர்கே நகர் இடை தேர்தலில் தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஓதுக்க வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் கூறியிருந்தனர். அதில் மெஜராட்டி எம்எல்ஏக்கள் தங்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இரு அணிகளின் வாதம்

இரு அணிகளின் வாதம்

இந்நிலையில் இரு அணியினரும் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி தங்கள் வாதத்தை எடுத்து வைத்தனர். இருப்பினும் இரவில் ஆர்கே நகரில் இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் கூறி இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.

ஆளுக்கு ஒரு புதுச் சின்னம்

ஆளுக்கு ஒரு புதுச் சின்னம்

இதனால் இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதில் தினகரனுக்கு தொப்பி சின்னமும், மதுசூதனனுக்கு இரட்டை மின்விளக்கு சின்னமும் ஓதுக்கப்பட்டுள்ளது.

குழப்பத்தில் தென் மாவட்டங்கள்

குழப்பத்தில் தென் மாவட்டங்கள்

கட்சி சின்னம் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கே எங்கள் ஆதரவு என பெரும்பாலான பிரமுகர்கள் தெரிவித்த வந்த நிலையில் சின்னம் முடக்கப்பட்டதால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

எப்படி ஜெயிக்க முடியும்

எப்படி ஜெயிக்க முடியும்

மேலும் தென் மாவட்ட கிராமப் பகுதிகளில் இரட்டை இலையை மட்டும்தான் மக்களுக்குத் தெரியும். சின்னம் பார்த்தே வாக்களித்துப் பழக்கப்பட்ட மக்கள்தான் அதிகம். எனவே இரட்டை இல்லாமல் உயிர் வாழ்வது கஷ்டம் என்றும் அவர்கள் புலம்புகின்றனராம்.

English summary
ADMK cadrs in Southern TN are in big worry after the poll symbol was feezed by the EC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X