இலங்கையின் அபாயச் சட்டம்...வேலை நிறுத்த போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கை அரசு தமிழக மீனவர்கள் பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிப்பதற்கு எதிராக இலங்கை அரசு இயற்றிய சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராடட்த்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை அரசு, தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது பல்வேறு வகையில் துன்புறுத்தி வருகிறது. மீனவர்களை சுட்டுக் கொவது, படகுகளை பறிமுதல் செய்வது, அவர்களிடம் இருக்கும் பணம், மீன் உள்ள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்வது என தமிழக மீனவர்களுக்கு பல இன்னல்களைக் கொடுத்து வருகிறது.

 Srilanka biring an ordinance against Tamil fisher folk and rameshwaram fishermen are in strike

இந்நிலையில் இலங்கை அரசு, தமிழர்கள் இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடிக்க வந்தால் ரூ 2 கோடி முதல் 20 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மீனவ அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதுகுறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்றிலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழர்கள் பரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதியை இலங்கை அரசு தங்கள் எல்லை என கூறி தமிழக மீனவர்களை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.

இலங்கை அரசு இப்படியொரு சட்டம் இயற்றினால் அது மொத்த தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் முற்றிலும் அழித்திடும் அபாயம் ஏற்படும் என கூறியுள்ளனர். அதேவேளையில் வேலை நிறுத்தத்தால் பல்லாயிரக்கணக்காக தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Srilanka government bringing a ordinance against tamil fisher folk and Rameswaram fishermen stage strike against this ordinance from today.
Please Wait while comments are loading...