For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

355 பேரின் கண்காணிப்பில் நல்லபடியாக நடந்து முடிந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு

Google Oneindia Tamil News

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணியளவில் தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.

இத்தேர்தலில், எஸ்.வளர்மதி (அதிமுக), என்.ஆனந்த் (திமுக), எம்.சுப்ரமணியம் (பாஜக), கே.அண்ணாதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) உட்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.

Srirangam by poll - a fact sheet

தேர்தல் துளிகள்:

- காலையில் துவங்கிய இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் பெண்கள்தான் அதிக அளவில் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

- ஒவ்வொரு வாக்குச்சாவடியும் வெப் கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டது.

- அனைத்து வாக்குச்சாவடிகளும் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள கண்காணிப்பு மையம் மூலமாக கண்காணிக்கப்பட்டன.

- கண்காணிப்பு மையத்தில் இருந்து வாக்கு நிலவரம் குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொண்டார் தலைமை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா.

- இத்தேர்தலில் முதல்முறையாக மத்திய அரசு ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

- 355 அதிகாரிகள் மைக்ரோ அப்சர்வர் என்னும் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

- ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் "டேப்ளட்" சாதனம் வழங்கப்பட்டிருந்தது. அதன்மூலமாக வாக்குப்பதிவு நிலவரம் உடனுக்குடன் சென்னை கண்காணிப்பு மையத்திற்கு சென்றடையும்படி வசதி செய்யப்பட்டிருந்தது.

- வாக்குச்சாவடிகளின் வாக்குபதிவு நிலவரம் ஒன்றிணைக்கப்பட்டு சராசரி வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டு வந்தது.

- இத்தேர்தலில் முதன்முறையாக வாக்காளர்கள் ஓட்டினைப் பதிவு செய்தவுடன் தேர்தல் அதிகாரிக்கு தகவல் சென்றடையும் வகையிலான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

- இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அரசு கேபிள் மற்றும் உள்ளூர் சேனல்கள் மூலமாக மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

- முக்கிய கட்சி வேட்பாளர்களில் திமுக ஆனந்தினைத் தவிர மற்ற மூன்று பேருக்கும் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டுரிமை இல்லை.

- வாக்குச்சாவடி பணிகளில் 1,572 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

- அவசரத்தேவைக்காக கூடுதலாக 48 கட்டுப்பாட்டுக் கருவிகள், 96 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

- தேர்தல் வாக்குப்பதிவைக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு பார்வையாளர் அனில்குமார் ஜா, பொதுப் பார்வையாளர் பல்கார் சிங், செலவினப் பார்வையாளர் ஸ்ரீதர் தோரா, சட்டம் ஒழுங்கு பார்வையாளர் வினோத்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

- தேர்தல் குறித்த தகவல்களை உடனுக்குடன் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான www.elections.tn.gov.in இல் வாக்குச் சாவடி வாரியாக வாக்குப்பதிவு நிகழ்வுகளை வீடியோவாக பார்க்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.

- இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் பணியினர் உட்பட 3,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

- அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு கலவரங்களைத் தடுக்க மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

- https://twitter.com/TNelectionsCEO என்ற டுவிட்டர் பக்கத்திலும் வாக்குப்பதிவு நிலவரத்தினை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வழி செய்யப்பட்டிருந்தது.

- வாட்ஸ் அப் மூலமாக வாக்குச்சாவடிகள் குறித்த புகார்களை தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

- புகார்களுக்காக கட்டணமில்லா தொலைபேசி 1800 425 7030 எண்ணுடன் திருச்சியில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது.

- 17 சதவீத மாற்று வாக்கு எந்திரங்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு நேரடியாக வாக்குச்சாவடிகளுக்கே சென்று பழுதான இயந்திரங்களுக்கு பதிலாக வழங்கப்படப்பட்டது.

- வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் ஏற்பட்ட சிறுசிறு தொழில்நுட்ப குறைகளும் உடனடியாக சரிசெய்யப்பட்டு வாக்குபதிவானது இடையூறுகள் இல்லாமல் நடைபெற்றது.

- 1 இல் இருந்து 50 என்ற அடிப்படையில் கண்காணிப்பு அறையில் கணிணிகள் வாக்குச்சாவடி வாரியாக வாக்குபதிவு நிலவரத்தினை பதிவு செய்தன.

- வாக்குச்சாவடிகளில் இருந்து உடனடியாக டேப்ளட் மூலமாக வருகின்ற "புஷ்" பட்டன் தகவல்கள் மற்றும் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வருகின்ற எஸ்.எம்.எஸ் தகவல்கள் ஒன்றிணைக்கப்பட்டு வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்பட்டது.

- இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவின், வாக்குப்பெட்டிகள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் திருச்சி, பஞ்சப்பூர் சாரநாதன் கல்லூரியில் வைக்கப்படுகின்றன.

- வருகின்ற 16 ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும்

English summary
Sri Rangam by poll full updates of voting, polling and election commission's reports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X