உண்ணாவிரதப் போராட்டத்தையே காமெடி பீசாக்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மீண்டும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட ஜீயர்- வீடியோ

  சென்னை: கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நடத்தப்படுகிற உண்ணாவிரதப் போராட்டங்களை படுகாமெடியாக்கியிருக்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்.

  ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்டாக வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். முதல் முறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது போலீசார் தலையிட்டு வாபஸ் பெற வைத்ததாக கூறப்பட்டது.

  புது ஸ்டைல் உண்ணாவிரதம்

  புது ஸ்டைல் உண்ணாவிரதம்

  2-வது முறை 2 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் ஜீயர். இதில், சாந்தி விமோசனம் என கூறிவிட்டு அறைக்குள் போய்விடுவார் ஜீயர். அரைமணிநேரம் கழித்து திரும்பி வந்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தார் ஜீயர்.

  கோவையில் உண்ணும் போராட்டம்

  கோவையில் உண்ணும் போராட்டம்

  இந்த சாந்தி விமோசன ஸ்டைல் உண்ணாவிரதப் போராட்டம் பெரும் சர்ச்சையானது. கோவையில் ஜீயரின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எதிராக உண்ணும் போராட்டத்தை தந்தை பெரியார் தி.க.வினர் நடத்தினர். அதுவும் மாட்டு கறி பிரியாணி சாப்பிட்டு போராட்டம் நடத்தினர்.

  கேலி பொருள்

  கேலி பொருள்

  உடனே, ஜீயர் உண்ணாவிரதம் இருப்பதாலேயே கோவில்களில் தீ பிடிக்கிறது என கதைகட்டி முடித்து வைத்துள்ளனர். ஜீயரின் போராட்டத்தால் தற்போது உண்ணாவிரதம் கேலிப் பொருளாக பார்க்கப்பட்டு வருகிறது.

  வீம்புக்கு நடத்தி அசிங்கம்

  வீம்புக்கு நடத்தி அசிங்கம்

  சமூக வலைதளங்களில் ஜீயரின் போராட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. எத்தனையோ நல்ல நோக்கங்களுக்காக கொள்கைகளுக்காக நடத்தப்படுகிற உண்ணாவிரதப் போராட்டங்களை வீம்புக்கு நடத்தி அசிங்கப்படுத்திவிட்டார் ஜீயர் என்பது பொதுவான குற்றச்சாட்டு.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Srivilliputhur Andal Jeeyar insulted the hunger strike protest.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற