குட்கா.. போதைப் பொருள்.. உயிரை பறிக்கும் துறைதான் சுகாதாரத் துறை… ஸ்டாலின் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குட்கா, போதைப் பொருள் லஞ்ச விவகாரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று தனது சொந்த தொகுதியான சென்னை கொளத்தூருக்குச் சென்ற ஸ்டாலின் மாணவர்களுக்கான நலத் திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொலை குற்றத்திற்கு ஒப்பானது போதைப் பொருளை விற்க லஞ்சம் வாங்கியது. போதைப் பொருள் உண்பதால் உயிரே போகும் நிலை ஏற்படும்.

உயிரை பறிக்கும் துறை

உயிரை பறிக்கும் துறை

மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது உயிரை காக்கும் துறை. ஆனால் அந்தத் துறை தற்போது உயிரை பறிக்கும் துறையாக விஜயபாஸ்கர் தலைமையில் மாறியிருக்கிறது.

ஏன் வழக்கு போடவில்லை?

ஏன் வழக்கு போடவில்லை?

தான் செய்தது தவறு இல்லை என்றால் ஏன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தை நாடவில்லை. அல்லது வதந்தியை பரப்புகிறார்கள் என்று கூறி ஏன் வழக்குப் போடவில்லை?

சட்டப்படி உறுதி

சட்டப்படி உறுதி

குட்கா லஞ்ச விவகாரத்தை சட்டபடியாக விஜயபாஸ்கர் சந்திக்க வேண்டும். சட்டத்தின் மூலம் அவர் தவறு செய்யவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை

போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை

பல்வேறு துறைகளில் புகார்கள் கூறினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குதிரை பேர ஆட்சி

குதிரை பேர ஆட்சி

தமிழகத்தில் குதிரை பேர ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால் அவர்கள் மக்கள் பிரச்சனைக்கு முகம் கொடுப்பதில்லை. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவே படாதபாடுபடுகின்றனர் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The opposition leader M.K. Stalin has attacked health minister Vijayabaskar on gutka issue.
Please Wait while comments are loading...