ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை.. தமிழிசை யோசனை
சென்னை: ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் அரசு வேலை வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகமெங்கும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு மகிச்சியோடு கொண்டாடும் வேளையில் ஆங்காங்கே நடக்கும் சில விபத்துகளும், உயிரிழப்புகளும் கவலை அளிக்கிறது. எனவே ஜல்லிக்கட்டு வீரர்களின் பாதுகாப்பிற்கும், அவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் உடனே உயர்தர முதல் உதவியும், ஏன் ஆங்காங்கே சகல வசதிகளும், இரத்த வங்கியுடன் நடமாடும் மருத்துமனைகளும்,மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் பணியில் இருப்பது உறுதி செய்ய வேண்டும்.

அவர்களுக்கு ஏதோ பெயரளவில் சிகிச்சை அளிக்காமல் அவர்களுக்கு மிகச்சிறந்த தரமான உயர்தர மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்க முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அவர்களுக்கு இலவச சிகிச்சைகள், உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ஏன் இந்த கவலை என்றல் சமீபத்தில் பாதுகாப்பில் இருந்த ஒரு காவலர் மாடு முட்டி அளவுக்கு அதிகமான இரத்த போக்கால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று செய்தி என்னை மிகவும் மனக் கவலை அடையச் செய்தது, எப்பாடு பட்டாகிலும் இது போன்ற நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும்.
காளைகள் இனம் அழியாமல் இருப்பதற்கு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் உரிய ஆராய்ச்சிகள் செய்து காளைகளின் இனிவிருத்திக்கு விஞ்ஞான பூர்வமாக காளைகளின் இனத்தை காக்க முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.
ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத் தொகை அளிக்க வேண்டும். மேலும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும், ஜல்லிக்கட்டு விளையாட்டை மற்ற விளையாட்டுக்கள் போல ஊக்குவிக்கும் விதமாக ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் இதன் மூலம் பல இளைஞர்கள் ஜல்லிக்கட்டு விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுவர். இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications