For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓகி புயலால் கனமழை : தமிழக - கேரள எல்லையில் போக்குவரத்து பாதிப்பு #Ochki

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓகி புயல் எல்லாம் சும்மா..அதுக்கு அடுத்து இன்னொன்னு இருக்கு.. வீடியோ

    செங்கோட்டை : ஓகி புயலால் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், தமிழக - கேரள எல்லையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    வங்கக்கடலில் உருவான ஓகி புயலால், தென் தமிழக மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகா உள்ள புளியரை பகுதியில் கடந்த1992ஆம் ஆண்டுக்குப்பின் பலத்த மழை பெய்துவருகிறது.

     Still Heavy Rain in Thirunelveli sengottai Areas most of the roads affected worse

    இம்மழையின் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்த நீர் நிலைகளின் கால்வாய்களுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து புளியரை பகுதிகளிலுள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.

    அரிஹரா நதி வெள்ளபெருக்கு அருகிலுள்ள தனியார் தோட்டங்களுக்குள் புகுந்துள்ளது. மேலும் பல இடங்களில் வயல்களுக்குள் தண்ணீர் புகுந்து சேதம் ஏற்பட்டு உள்ளது.

    குரங்கநாடு ஏரி, தெற்குமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் வயல்களில் பெரும் சேதம் உருவாகியுள்ளது. மேலும் புளியரை வங்கிக்கு கீழ்ப்புறம் உள்ள வயல்களில் முறையான பாதையமைப்பு, கழிவுநீரோடை வசதிகள் இல்லாததால் அங்கும் வெள்ளம் புகுந்துள்ளது.

    கனமழையின் காரணமாக தமிழக - கேரள எல்லை கிராமங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    English summary
    Still Heavy Rain in Thirunelveli sengottai Areas most of the roads affected worse.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X