தஞ்சையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிக்க சென்ற திமுகவினரை விரட்டிய மாணவர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தஞ்சையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க சென்ற திமுகவினரை மாணவர்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் ஆபீஸ் எதிரே 19வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். காவிரி தீர்ப்பாயத்தை ரத்து செய்ய கூடாது, காவிரி மேலாாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளலை வலியுறுத்தி விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Students chase away DMK leaders in Tanjore

இந்த நிலையில் இன்று திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பழனி மாணிக்கம், டி.ஆர்.பாலு, நாடாளுணன்ற உறுப்பினர் எல்.கணேசன், எம்எல்ஏக்கள் அன்பழன், துரை சந்திரசேகரன் உள்ளிட்ட திமுகவினர் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தனர்.

டி.ஆர்.பாலு மேடையில் பேசியபோது, மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். "மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டது திமுகதான்" என்றும், "போராட்டத்தில் அவர்கள் பங்கேற்க கூடாது" என்றும் மாணவர்கள் கோஷமிட்டனர்.

Students chase away DMK leaders in Tanjore

இதனால் திமுகவினர்-மாணவர்கள் நடுவே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு இரு தரப்பையும் கலைந்து போக கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக நடத்தப்பட்ட போராட்டத்தின்போதும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அப்போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க சென்றபோது அதற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து திருப்பியனுப்பியது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Students chase away DMK leaders who were visited protest area in Tanjore on today.
Please Wait while comments are loading...