For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரமாகும் ஜல்லிக்கட்டு போராட்டம் - சென்னையை நோக்கி படைதிரளும் மாணவர் பட்டாளம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்க மாணவர்கள் அணி அணியாக சென்னைக்கு வருகின்றனர். ரயிலில் மட்டுமின்றி பேருந்து, கார்களிலும் மாணவர்கள் வந்துகொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் தொடங்கி, மதுரை, கோவை, நெல்லை, சென்னை என போராட்டம் மிகப்பெரிய அளவில் பற்றி பரவி வருகிறது.

சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் பலரும் மெரீனா கடற்கரையில் திரண்டு, மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இரவு பகலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் தலைநகரான சென்னையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கடற்கரையில் நடைபெறும் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Students from various districts rush to Chennai

ஐடி நிறுவன ஊழியர்களும் பல்லாயிரக்கணக்கில் பேரணியாக வந்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தை நடத்தியும், இளைஞர்கள் தங்களின் போராட்டத்தை விலக்கிக் கொள்ளவில்லை.

இதனையடுத்து 14 பேருடன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு பிரதமரிடம் பேச்சு வார்த்தை நடத்தி தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து எடுத்துக்கூறுவார் என்று தெரிகிறது.

இதனிடையே கடந்த இரண்டு நாட்களை விட வியாழக்கிழமை முதல் சென்னையில் போராட்டம் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல கல்லூரிகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பல மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் சென்னை நோக்கிப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்க மாணவர்கள் ரயிலில் மட்டுமின்றி பேருந்து, கார்களிலும் படை திரண்டு வந்துகொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Students from various towns are rushing to Chennai to boost up the protest against Jallikattu ban.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X