என்ன ஒரு ஒற்றுமை.. மோடி வந்த அதே நாளில் சூரப்பாவும் பதவியேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்தார் மோடி!- வீடியோ

  சென்னை: தமிழகத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

  கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இரு ஆண்டுகளாக காலியாக உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கன்னடரான சூரப்பாவை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

  Surappa take over as VC of Anna University

  காவிரி விவகாரம் நடைபெற்று வரும் நிலையில் சூரப்பாவை துணைவேந்தராக நியமனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. எனினும் இதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என்று ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்தது.

  இதுகுறித்து சூரப்பா கூறுகையில் தான் தமிழ் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். வேறு மாநிலங்களில் பணி செய்தபோதும் அந்த மாநில மொழியை கற்றுக் கொண்டேன். எனது நியமனம் குறித்து அரசியல் விமர்சனம் செய்வது பற்றி தான் கருத்து கூற விரும்பவில்லை என்பதை சூரப்பா தெரிவித்திருந்தார்.

  இந்த நிலையல் சூரப்பா இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பேற்றுக் கொண்டார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Surappa take over as Vice Chancellor of Anna University despite opposes comes.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற