எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்... யாருக்கு என்ன கிரேடு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 10லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் முதன் முறையாக ரேங்க் அடிப்படையில் இல்லாமல் புதிய மாற்றத்துடன் கிரேடு முறையில் வெளியிடப்பட்டுள்ளது.

மதிப்பெண்கள் - கொடுக்கப்பட்டுள்ள கிரேடுகள்:

Tamil Nadu 10th result 2017 : SSLC marks and grades

481 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 38,613 பேர் - ஏ கிரேடு பெற்றுள்ளனர்.

451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு பெற்றுள்ளனர்.

426 முதல் 450 - 1,13,8311 மாணவர்களுக்கு சி கிரேடு பெற்றுள்ளனர்.

401 முதல் 425 வரை 1,11,266 பேர் - டி கிரேடு பெற்றுள்ளனர்.

301 முதல் 400 வரை பெற்ற 3,66,948 மாணவர்கள் இ கிரேடு பெற்றுள்ளனர்.

வழக்கமாக, பொதுத்தேர்வு முடிவு வெளியாகும்போது, மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்கள், பாடவாரியாக முதல் 3 இடங்கள் பெற்றவர்களின் ரேங்க் பட்டியலை அரசு தேர்வுத்துறை வெளியிடும். இவ்வாறு மாணவர்களைத் தர வரிசைப்படுத்துவது மாணவர்கள், பள்ளிகள் இடையே ஆரோக்கியமற்ற போட்டிச் சூழலை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும், மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதாலும் அதை தவிர்க்கும் விதமாக ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை இந்த ஆண்டுமுதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu 10th result 2017 : SSLC marks and grades For the First time, the Tamil Nadu government has eradicated the rank list. So, no State first, second or third rankers will be declared. We believe that this move will take off the pressure from students who fear losing even a single mark for their ranks .
Please Wait while comments are loading...