For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹை-டெக் பிரச்சாரத்தில் அதிமுகவின் பாசறைகள்: அரசு சாதனைகளை சமூக வலைதளங்களில் புகுத்த திட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மக்களவைத் தேர்தலில் செல் போன், இணையதளம் மூலம் ஹைடெக் பிரச்சாரத்தில் ஈடு பட அதிமுகவின் இளைஞர்- இளம்பெண் பாசறை தயார் படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க புதிய வாக்காளர்களின் ஆதரவு முக்கிய மானதாக விளங்கியது. அதை மக்களவைத் தேர்தலிலும் தக்க வைக்கும் முயற்சியில் அதிமுக முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக அக்கட்சியின் இளைஞர், இளம்பெண் பாசறை யைத் தயார்படுத்தும் முயற்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆலோசனைக் கூட்டங்களும் கடந்த 22-ம் தேதி மதுரையில் தொடங்கி மாவட்ட வாரியாக நடந்து வருகின்றன.

இளைஞர் பாசறைக் கூட்டம்

இந்தக் கூட்டங்களில் பாசறை பொறுப்பாளர்கள், அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று இளைஞர்களுக்கு தேர்தல் களப்பணி குறித்து பாடம் நடத்திவருகின்றனர். செல்போன், இணையதளம் மூலம் அரசின் நலத்திட்டங்களை மக்களிடமும், இளைஞர்களிடமும் கொண்டு செல்வது குறித்து பாசறை உறுப் பினர்களுக்கு கட்சி நிர்வாகிகள் வகுப்பு எடுக்கின்றனர்.

செல்போன் பிரச்சாரம்

பாசறையில் இருக்கும் இளைஞர்களில் பலர் தினமும் 100 பேருக்காவது "குட்மார்னிங், குட்நைட்" குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தகவல் அனுப்பும்போது அதிமுக அரசின் சாதனைகளையும் புள்ளி விவரத்துடன் அனுப்புமாறு பயிற்சி அளிக்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்கள்

அதேபோல, முதல்வர் நலத் திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான படங்களையும் செய்திகளையும் சமூக வலைதளங்கள் மூலமாக இளைஞர்களிடம் கொண்டு செல்ல அறி வுறுத்தப்பட்டுள்ளது.

திண்ணைப் பிரச்சாரம்

பாசறை உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் வீடுதோறும் சென்று அரசின் நலத்திட்டங்களால் பயன் பெற்ற இளைய சமுதாயத்தினரைப் பாசறையின் உறுப்பினராக்கவும், மற்றவர்களை அதிமுகவின் ஆதரவாளராக மாற்றவும் திண்ணைப் பிரச்சாரம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது'' என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
The Tamil Nadu government has resorted to social media and information technoligy power to woo young people in the southern Indian state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X