குரங்கணி தீ: கடவுளே காப்பாற்றப்பட்டவர்களைக் காப்பாற்று- தமிழிசை பிரார்த்தனை

Written By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குரங்கணி தீவிபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய அனைவரையும் காப்பாற்று என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் டுவிட்டரில் பிரார்த்தனை செய்துள்ளார்.

குரங்கணி மலை பகுதிக்கு 36 பேர் மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர். அங்கு நேற்று மாலை காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த தீ வேகமாக பரவியதில் அவ்வழியாக மலையடிவாரத்துக்கு வந்த 36 பேரும் சிக்கி கொண்டனர்.

tamilisai

அப்போது அவர்களில் 9 பேர் உடல் கருகி இறந்துவிட்டனர். மேலும் 10 பேர் காயங்களின்றி மீட்கப்பட்டனர். மற்ற 17 பேர் மதுரை, தேனி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீக்காயங்களின் தன்மைக்கேற்ப அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் சென்னையை சேர்ந்த நிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்தது. இந்நிலையில் 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் நலம் பெற வேண்டி தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரார்த்தனை செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில் கடவுளே.... தீயிலிருந்து.. காப்பாற்றப்பட்டவர்களைக் காப்பாற்று...... தீக்காயத்திற்கான சிகிச்சையை அவர்கள் உடல்ஏற்று..உயிர்காக்கட்டும்..... என்று தமிழிசை பதிவு செய்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP State President Tamilisai Soundararajan prays for Theni Forest Fire victims who gets fire inquiry and gets treatment in hospital.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற