பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2017 - 94.4 மாணவர்கள் வெற்றி! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. தமிழகத்தில் 94.4 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருந்தனர். இது கடந்த ஆண்டை விட 0.8 சதவிதம் அதிகம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை பத்து மனிக்கு வெளியாகியது. தமிழக பள்ளிக் கல்விஒயில் ரேங்க் முறை இல்லாத காரணத்தால் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி முடிவுகள் வெளியாகின.

 TamilNadu sslc class 10th standard board exam result

கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை 11 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். இதில் 94.4 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துவிட்டனர். கடந்த ஆண்டை விட 0.8 சதவிதம் தேர்ச்சி விகிதம் இந்தாண்டு அதிகம். வழக்கம் போல் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது. மாணவிகள் 96.2 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 4 சதவீதம் குறைந்து தேர்ச்சி 92.5 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர்.

பத்தாம் வகுப்பில், 61,000 மாணவர்கள் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். 17,481 பேர் அறிவியலில் நூற்றுக்கு நூறும், 13,759 பேர் கணிதத்தில் நூற்றுக்கு நூறும், 61,115 பேர் சமூகவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணும் பெற்றிருந்தனர்.

12ஆம் வகுப்புப்பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த விருதுநகர் மாவட்டமே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் முதலிடம் பெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்ட வாரியாக முதல், இரண்டு, மூன்று என தரம் பிரிக்க வேண்டாம் என ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Tamilnadu 10th standard board exam result has been announced in the morning by directorate of school education. As usual girls scored high.
Please Wait while comments are loading...